தமிழ்நாடு

“இஸ்லாமிய பெண்களின் கல்வி குறித்து சர்ச்சை கேள்வி” : கேந்திரிய வித்யாலயாவுக்கு கல்வியாளர்கள் கண்டனம்!

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 6ஆம் வகுப்புத் தேர்வில் இஸ்லாமியப் பெண்கள் கல்வி குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

“இஸ்லாமிய பெண்களின் கல்வி குறித்து சர்ச்சை கேள்வி” : கேந்திரிய வித்யாலயாவுக்கு கல்வியாளர்கள் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை நரிமேடு பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. இங்கு நேற்று ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான மாதாந்திர தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் 'இஸ்லாமியர்கள் குறித்த பொதுவான கருதுகோள் என்ன?' என கேள்வி ஒன்று கேட்கப்பட்டிருந்தது.

இந்த கேள்விக்கு, பெண் குழந்தைகள் கல்வி கற்பதை அவர்கள் விரும்பமாட்டார்கள், பெண் குழந்தைகள் கல்வி கற்பதை அவர்கள் விரும்புவார்கள், அவர்களில் சிலர் ஏழைகள், மேற்கூறியவற்றில் எதுவும் இல்லை என நான்கு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

இந்த நான்கு விடைகளில், 'பெண் குழந்தைகள் கல்வி கற்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்' என்பதுதான் இக்கேள்விக்குச் சரியான விடை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டதை அறிந்து சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் அதிர்ச்சியடைந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“இஸ்லாமிய பெண்களின் கல்வி குறித்து சர்ச்சை கேள்வி” : கேந்திரிய வித்யாலயாவுக்கு கல்வியாளர்கள் கண்டனம்!

மேலும் இந்த கேள்வியைத் தயாரித்த சமூக அறிவியல் ஆசிரியர் தேவ் ரத்தன் இதுகுறித்து கூறுகையில், 'ஆறாம் வகுப்பு குடிமையியல் புத்தகத்தில் உள்ள தகவலின் அடிப்படையில்தான் கேள்வி கேட்கப்பட்டுள்ளது' என விளக்கம் கொடுத்துள்ளார்.

ஆனால், பாடப் புத்தகத்தின் தகவல் அடிப்படையில் பார்த்தால், இஸ்லாமிய பெண் குழந்தைகள் கல்வி கற்க இயலாமல் போனதற்குக் காரணம் ஏழ்மை என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆசிரியர் பாடத்தின் தகவலைத் தவறாகப் புரிந்து கொண்டு கேள்வியைத் தயாரித்தாரா அல்லது வேண்டுமென்றே இப்படி ஒரு கேள்வியைத் தயாரித்துள்ளாரா என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் மாணவர்களிடையே நஞ்சை விதைக்கும் விதமாக கேள்வியைத் தயாரித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories