தமிழ்நாடு

முறைகேடுகளுக்குப் பெயர்போன அ.தி.மு.க : சட்டப்பேரவையில் ஆதாரத்துடன் புட்டுப்புட்டு வைத்த அமைச்சர்கள்!

அ.தி.மு.க ஆட்சியில் தொழிலகக் கூட்டுறவு வங்கியில் சிறு, குறு நிறுவனங்கள் பெயரில் போலி நகைகளை வைத்து, ரூபாய் 7 கோடிக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

முறைகேடுகளுக்குப் பெயர்போன அ.தி.மு.க : சட்டப்பேரவையில் ஆதாரத்துடன் புட்டுப்புட்டு வைத்த அமைச்சர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தின் போது பேசிய ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், "தமிழ்நாட்டில் தொழிலகக் கூட்டுறவு வங்கியில் சிறு, குறு நிறுவனங்கள் பெயரில் போலி நகைகளை வைத்து, ரூபாய் 7 கோடிக்கு மோசடி நடைபெற்றுள்ளது.

இதேபோன்று, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஐந்து தொழிலகக் கூட்டுறவு வங்கிகளில் இதேபோன்ற மோசடி நடைபெற்றுள்ளது. இந்த முறைகேடுகள் தொடர்பாக 45 வங்கிக் கிளைகளில் ஆய்வு நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.

அதேபோல் இன்றைய விவாதத்தில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அ.தி.மு.க ஆட்சியில் பயிர்க்கடன் வழங்கியதில் ரூபாய் 516 கோடி அளவில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இந்த முறைகேடுகள் சேலம், நாமக்கல்லில் மட்டுமே நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, "அ.தி.மு.க ஆட்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மூன்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ.3.28 கோடி அளவில் முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது" என அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories