சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட் தாக்கலின்போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021 - 2022ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பட்ஜெட் உரை ஆற்றி வருகிறார்.
தி.மு.க அரசின் இந்த பட்ஜெட்டில் சென்னை மாநகரை சீர்படுத்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னைக்கான புதிய திட்டங்கள் வருமாறு:
சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்; ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து தாம்பரம் வழியாக கிளம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்கும் பணி விரைவாக தொடங்கப்படும்.
சென்னை பொது இடங்களில் சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும்.
சென்னையுடன் இணைக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.2,056 கோடி ஒதுக்கீடு.
சென்னையில் உள்ள நீர்வழிகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் திட்டத்திற்கு ரூ.2371 கோடி ஒதுக்கீடு.
கொசஸ்தலை ஆற்றுப்பகுதியில் வெள்ள நீர் வடிகால் அமைப்புக்கு ரூ.87 கோடி ஒதுக்கீடு.
சென்னையில் கணேசபுரம் சுரங்கப்பாதை, கொன்னூர் நெடுஞ்சாலை, தெற்கு உஸ்மான் சாலையில் 335 கோடியில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும்.
உயிரியல் அகழ்ந்தெடுப்பு முறையில் சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கு மீட்டெடுக்கப்படும்.
சீர்மிகு நகரங்கள் திட்டங்களுக்கு ரூ.2350 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அம்ருத் திட்டத்தை செயல்படுத்த ரூ.140 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.