தமிழ்நாடு

மதுரை, கோவையிலும் மெட்ரோ ரயில் சேவை... பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட நிதி அமைச்சர்!

தமிழ்நாட்டில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான சில அறிவிப்புகளை பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.

மதுரை, கோவையிலும் மெட்ரோ ரயில் சேவை... பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட நிதி அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பின் தமிழ்நாடு அரசின் 2021-2022 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.

பட்ஜெட் உரையின்போது, தமிழ்நாட்டில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான சில அறிவிப்புகளை பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.

சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரயில் 2-ம் திட்டம் 2026-ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும், ஒன்றிய அரசு தெரிவித்தபடி, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்டத்திற்கு பங்கு மூலத்தனத்திற்கான விரைந்த முறையான ஒப்புதலை வழங்குமாறும் அதற்கு இணையான ஒன்றிய அரசின் பங்கை விரைந்து வழங்குமாறும் வலியுறுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கோடம்பாக்கம் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் சேவை 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் திட்டத்தை தாம்பரம் வழியாக விமான நிலையத்தில் இருந்து கிளம்பாக்கம் பேருந்து முணையம் வரை நீட்டிக்கும் பணியை விரைவில் தொடங்க உள்ளதாகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு அடுத்தபடியான பெரிய நகரமான கோவையில் மெட்ரோ ரயில் கொண்டு வர வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பட்ஜெட்டில் கூறியுள்ளார்.

இதேபோல், மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்குவது குறித்து சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு அறிக்கை தயாரிகக்ப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories