தமிழ்நாடு

"ஒன்றிய அரசின் செயல்பாடு.. இந்தியா பார்க்காத மோசமான நிலைமை இது": திருச்சி சிவா குற்றச்சாட்டு!

நாடாளுமன்றத்தில் பல்வேறு மசோதாக்கள் விவாதம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது என மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

திருச்சி சிவா
திருச்சி சிவா
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளைக் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து, அவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலங்களவை தி.மு.க குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி, "ஒன்றிய அரசைப் பொறுத்தவரையில் பிடிவாதமாக உள்ளது. உணர்வுகளுக்கும் கோரிக்கைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டிய அரசாங்கம் எதையும் கேட்பதாக இல்லை.

நாடாளுமன்றத்தில் எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்றும்போது, அதனை நிலைக்குழுவுக்கு அனுப்புவதில்லை, விவாதிப்பதில்லை. இந்தியா கண்டிராத மோசமான நிலைமை இது.

பெகசாஸ் விவகாரம் என்பது தனி நபர் மட்டுமின்றி தேச பாதுகாப்பு சார்ந்த நலன் என்பதால், ஒட்டுக்கேட்க அரசுதான் சொன்னதா என தெரிவிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. ஆனால், அதனைத் தவிர்க்கவே அரசு எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க மறுக்கிறது. பல்வேறு மசோதாக்கள் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு மீண்டும் வருவதற்குள் மழைக்கால கூட்டத்தொடரே முடிந்து விடும். நீதிமன்றத்தைப் பொறுத்தவரை எங்களைப் போல் அவையில் கேள்வி கேட்பதைப் போல் கேட்க முடியாது. ஜனநாயகத்தின் சோதனைக்காலம் இது. கூட்டம் முடிந்த பின்பு மக்களிடம் தான் பிரச்சனையை எடுத்துச் செல்ல இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories