தமிழ்நாடு

“பழமை மாறாத சமத்துவ திருவிழா” : ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமியர்களுடன் நடந்த ‘ஆடி படையல்’ !

கொட்டாம்பட்டி அருகே 100 ஆட்டுகிடா, 600 சேவல்களை பலியிட்டு நடைபெற்ற ஆடிபடையல் திருவிழா எளிமையாக நடைபெற்றது.

“பழமை மாறாத சமத்துவ திருவிழா” : ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமியர்களுடன் நடந்த ‘ஆடி படையல்’ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சுந்தராஜபுரம், வீரசூடாமனிபட்டி, கச்சிராயன்பட்டி பால்குடி, கணேசபுரம் ஆகிய ஐந்து கிராமத்தினர் ஒன்றினைந்து நடத்திய ஆடிப்படையல் திருவிழா வழக்கமான உற்சாகமின்றி எளிமையாக நடைபெற்றது.

சுந்தரராஜபுரம் சின்னகண்மாய் கரையில் அமைந்துள்ள ஐந்துமுனி கோவிலில் ஆடிப்படையல் திருவிழா ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு தினத்திற்கு முதல்நாள் விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். இதில் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் ஆடுகளையும், சேவல்களையும் கொண்டு வந்து கொடுப்பர்.

அதன்படி பக்தர்களால் கொண்டு வரப்பட்ட 100 ஆட்டு கிடா, 600 சேவல்கள் இன்று இக்கோயிலில் பலியிடப்பட்டு அதனை மண்பானையில் வைத்து சமைத்து உண்பது வழக்கம். இதற்காக மண்பானையில் கிடா மற்றும் சேவலின் இறைச்சிகளை மொத்தமாக போட்டு, இதனுடன் மசாலா பொருட்களை சேர்க்காமல், வெறும் வேப்பிலையை கலந்து கோவிலின் முன்பு கறியை சமைக்கின்றனர்.

“பழமை மாறாத சமத்துவ திருவிழா” : ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமியர்களுடன் நடந்த ‘ஆடி படையல்’ !

பின்னர் அக்கிராமத்தில் உள்ள இஸ்லாமியர்களை வரவழைக்கப்பட்டு கோயிலில் மரியாதை செய்து பின்னர் பாறையில் அமர்ந்து இஸ்லாமியர்களுடன் இனைந்து சமூக நல்லிணக்கத்தை போற்றும் வகையில் அனைத்து சமுதாய பொதுமக்களும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாமிசம் கோவில் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதில் முழுக்க, முழுக்க ஆண்கள் மட்டுமே பங்கேற்று இறைச்சியை சுத்தம் செய்வது முதல் அதனை பிரித்து கொடுத்து சமையல் செய்வது என அனைத்துமே ஆண்கள் மட்டுமே ஈடுபடுவர் என்பது குறிப்பிடத்தக்கது. மழைவேண்டியும், நோய்நொடியின்றி வாழவும் இந்த ஆடிப்படையல் திருவிழா நடைபெறுவதாகவும், இந்த ஆண்டு கொரோனா தொற்று கட்டுபாடுகள் பின்பற்றி மிக எளிமையாக திருவிழா நடத்தப்பட்டதாவும் கிராமத்தினர் தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories