தமிழ்நாடு

KYC பதிவதாகச் சொல்லி நூதன திருட்டு; சிம் கார்டுக்காக ரூ.1.40 லட்சத்தை இழந்த சென்னை மருத்துவர்!

சென்னை மருத்துவரிடம் நூதன முறையில் வங்கிக் கணக்கிலிருந்து 2.4 லட்சம் ரூபாய் திருடிய சைபர் மோசடி கும்பல் குறித்து அண்ணாநகர் போலிஸிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

KYC பதிவதாகச் சொல்லி நூதன திருட்டு; சிம் கார்டுக்காக ரூ.1.40 லட்சத்தை இழந்த சென்னை மருத்துவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த மருத்துவர் சாந்தினி பிரபாகர். இவர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தன்னுடைய செல்போன் எண்ணிற்கு KYC பற்றி முழு தகவல் அளிக்க வேண்டும் என குறுஞ்செய்தி ஒன்று புதிய எண்ணில் இருந்து வந்தது. அந்த தகவல்களை கொடுக்காவிட்டால் சிம்கார்டு செயலிழந்துவிடும் என குறிப்பிடப்பட்டது. உடனடியாக அந்த குறுஞ்செய்தி வந்த செல்போன் எண்ணை வாடிக்கையாளர் சேவை மையம் என நம்பி தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது q pay எனப்படும் செயலி லிங்க் ஒன்றை அனுப்புவதாகவும், அதன் மூலம் 10 ரூபாய் பணப்பரிமாற்றம் செய்தால் போதும் என அந்த எண்ணில் பேசிய நபர் தெரிவித்துள்ளார். அந்த நபர் பேசிக்கொண்டே இருக்கும்போது , சிம் கார்டு சேவை துண்டிக்கப்பட கூடாது என்பதற்காக q pay செயலியை பதிவிறக்கம் செய்து,10 ரூபாய் பணத்தையும் வங்கி மூலம் ஆன்லைனில் அனுப்பியுள்ளார். அந்த செயலி மூலம் பணம் அனுப்பப்பட்டதாக ரசீது ஆன்லைனில் வந்த பிறகு வாடிக்கையாளர் தகவல் மையத்துடன் பேசிக் கொண்டிருந்த அழைப்பை துண்டிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு சில நிமிடங்களில் தனது வங்கிக் கணக்கில் இருந்து ஒரு லட்ச ரூபாய் 90 ஆயிரம் ரூபாய் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் என அடுத்தடுத்து பணம் எடுக்கப்பட்ட குறுஞ்செய்தி வந்ததாக தெரிவித்துள்ளார். அதன் பின்னும் தனது செல்போனை பயன்படுத்த முடியாத நிலை இருந்ததாக தெரிவித்துள்ளார். அப்போதுதான் செல்போனை ஹேக் செய்து உள்ளார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் உடனடியாக தன்னுடைய வங்கி கணக்கு உள்ள எஸ்பிஐ வங்கிக்கு தொடர்பு கொள்ள முடியாமலும் அதே நேரத்தில் மற்றவர்களிடம் தொடர்புகொண்டு உதவி கேட்க முடியாமலும் ஹேக் செய்து வைத்திருப்பதையும் அறிந்ததாக தெரிவித்துள்ளார்.

KYC பதிவதாகச் சொல்லி நூதன திருட்டு; சிம் கார்டுக்காக ரூ.1.40 லட்சத்தை இழந்த சென்னை மருத்துவர்!

இதனையடுத்து அருகில் உள்ள லேண்ட்லைன் மூலமாக எஸ்பிஐ வங்கிக்கு தொடர்பு கொண்டு தெரிவித்ததாக சாந்தினி பிரபாகர் புகாரில் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர் மையம் என தொடர்பு கொண்ட எண் இன்டர்நெட் மூலமாக பேசப்படும் அழைப்பு என்பதும் தெரியவந்ததாக குறிப்பிட்டுள்ளார். ட்ரூ காலர் செயலி மூலம் பேசிய நபர் யார் என்று பார்க்கும் போது கூட வோடோபோன் கேஒய்சி சர்வீஸ் என்ற பெயரே இருந்ததாகவும் சாந்தினி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

தான் Q Pay என்ற செயலியை பதிவிறக்கம் செய்து தனது ஆன்லைன் வங்கிக் கணக்கு மூலமாக பணம் செலுத்தும் போது, தன்னுடைய போனை ஹேக் செய்து முழு கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அனைத்து தகவலையும் திருடியதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தான் எந்த வித otp அல்லது கிரெடிட் கார்ட் டெபிட் கார்ட் வங்கிக் கணக்குகள் தொடர்பான எந்த தகவலையும் வாடிக்கையாளர் மையம் என கருதி பேசியவர் இடம் தெரிவிக்காமலேயே தன்னுடைய போனை ஹேக் செய்து இந்த கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

இது தொடர்பாக அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், சிம்கார்டு நிறுவனங்களிலிருந்து குறுஞ்செய்தி வருவது போல் தனியார் எண்ணில் இருந்து சிலர் குறுஞ்செய்திகள் அனுப்புவதாகவும், குறிப்பாக KYC அப்டேட் செய்ய வேண்டும் இல்லையெனில் சிம்கார்டு செயலிழந்து விடும் என்ற குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு மோசடியை கும்பல் அரங்கேற்றுவதாகவும் தெரிவித்துள்ளனர். சமீபகாலமாக அதிகாரப்பூர்வ சிம்கார்டு நிறுவனங்களிலிருந்து வராத குறுஞ்செய்தியை நம்பி பலரும் இதுபோல் ஏமாந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

KYC பதிவதாகச் சொல்லி நூதன திருட்டு; சிம் கார்டுக்காக ரூ.1.40 லட்சத்தை இழந்த சென்னை மருத்துவர்!

குறிப்பாக இந்த மோசடி கும்பல் Team viewer போன்ற பல செயலிகளை பயன்படுத்தி பணத்தைச் செலுத்தினால் சிம் கார்டு சேவையை தொடர்ந்து பெறலாம் என கூறி ஏமாற்றுவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தச் செயலிகள் பதிவிறக்கம் செய்யும் நபர்களின் செல்போன்களை ஹேக் செய்து அவர்கள் செல்போனில் உள்ள அனைத்து தகவல்களையும் அதே நேரத்தில் அவர்கள் வங்கிக் கணக்கு தொடர்பாக ஆன்லைனில் பேமெண்ட் செய்யும் பொழுதும் முழு தகவல்களையும் அந்த மோசடி கும்பல் திருடி விடுவதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு ஹேக் செய்து தகவல்கள் திருடி பணத்தை கொள்ளை அடிப்பதை ஒரு சில நிமிடங்களில் செய்து முடிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த செல்போன் மூலம் வேறு கால்கள் செய்ய முடியாமலும் முடக்கி விடுவதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது இதுபோன்ற மோசடி பல்வேறு சிம்கார்டு நிறுவனங்கள் வாடிக்கையாளரிடம் அதிகளவு நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக பிஎஸ்என்எல் வோடபோன் ஆகிய செல்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories