தமிழ்நாடு

23.25 கி.மீ தூரத்தை 2.36 மணி நேரத்தில் கடந்து 6 வயது சிறுவன் சாதனை.. திருவொற்றியூர் தி.மு.க MLA பாராட்டு!

சென்னை திருவொற்றியூரில் 23 கிலோ மீட்டர் தூரம் ஓடி மாரத்தான் போட்டியில் சாதனை படைத்த சிறுவனுக்கு திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி சங்கர் சிறுவனை பாராட்டி ரொக்க பரிசு வழங்கிய கெளரவப்படுத்தினர்

23.25 கி.மீ தூரத்தை 2.36 மணி நேரத்தில் கடந்து 6 வயது சிறுவன் சாதனை.. திருவொற்றியூர் தி.மு.க MLA பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்த மோகனகிருஷ்ணன் என்பவரது 6 வயது மகன் காமேஸ்வரன். இவர் சிறுவயது முதல் ஓட்டப்பந்தயம் பயிற்சி செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், யுனிவர்சல் சாதனையாளர் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக, இன்று காலை 23.25 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணிநேரம் 36 நிமிடம் மாரத்தான் ஓடி இதுவரை யாரும் தொடாத சாதனையை நிகழ்த்தி சாதனையாளர் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

எண்ணூர் கே.வி.குப்பத்தில் மாரத்தான் ஓட்டத்தை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். கே.வி.குப்பத்தில் இருந்து எண்ணூர் நெடுஞ்சாலை சூரியநாராயண சாலை வழியாக காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் எண்ணூர் தாழங்குப்பம் வரை சென்று மீண்டும் கே.வி.குப்பத்தை வந்தடைந்தார்.

மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்த சிறுவன் காமேஸ்வரனுக்கு திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மேளதாளங்களுடன் எம்.எல்.ஏ சிறப்பான வரவேற்பு அளித்து, பணமாலை சூட்டி 50 ஆயிரம் ரூபாய் பரிசு மற்றும் சான்றிதழை கே.பி.சங்கர் வழங்கினார். சிறுவனின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories