தமிழ்நாடு

“காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு, பிறந்தநாள், திருமண நாட்களில் விடுமுறை வழங்க வேண்டும்” : அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு மற்றும் பிறந்தநாள் திருமண நாள் நாட்களில் விடுமுறை வழங்க வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

“காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு, பிறந்தநாள், திருமண நாட்களில் விடுமுறை வழங்க வேண்டும்” : அதிரடி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக்க ஏதுவாகவும், குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், தமிழ்நாடு காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு மற்றும் பிறந்தநாள் திருமண நாள் நாட்களில் விடுமுறை வழங்க வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு, காவல்துறை தலைமை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கை பின்வருமாறு:-

1. காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக்க ஏதுவாகவும், காவலர்கள் தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும்.

2. வார ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும், ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகைநேர ஊதியம் வழங்கப்படல் வேண்டும்.

3.காவல் ஆளிநர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களில்

அவர்களது குடும்பத்தாருடன் கொண்டாட ஏதுவாக அந்தந்த நாட்களில் அவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

4.தமிழக காவல் துறையின் சார்பாக பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துச் செய்தி, மாவட்ட மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக, சம்பந்தப்பட்ட ஆளிநர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

5. மேற்கண்ட அறிவுரைகளை அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் தவறாமல் செயல்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

அனைத்து காவலர்களுக்கும் வாரத்தில் ஒருநாள் விடுப்பு என்பது தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories