தமிழ்நாடு

“திருந்தி வாழ போறேன்.. இனி எந்த தப்பும் பண்ணமாட்டேன்” : பா.ஜ.க ரவுடி போலிஸில் பரபரப்பு மனு!

பா.ஜ.கவை சேர்ந்த ரவுடி கல்வெட்டு ரவி தான் திருந்தி வாழ விரும்புவதாக காவல்துறையில் மனு அளித்துள்ளார்.

“திருந்தி வாழ போறேன்.. இனி எந்த தப்பும் பண்ணமாட்டேன்” : பா.ஜ.க ரவுடி போலிஸில் பரபரப்பு மனு!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பிரபல ரவுடிகள், குற்றப் பின்னணி கொண்டவர்கள், மோசடி பேர்வழிகள் என யாராக இருந்தாலும் பரவாயில்லை என கட்சிக்குள் இழுத்து எப்படியாவது உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.க தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

வட மாநிலங்களில் பின்பற்றிய இந்த நடைமுறையை தமிழ்நாட்டிலும் பின்பற்றி வருகிறது பா.ஜ.க. அந்தவகையில் வடசென்னையைச் சேர்ந்த ரவுடி கல்வெட்டு ரவி கடந்தாண்டு பா.ஜ.கவில் இணைந்தார்.

கல்வெட்டு ரவி மீது 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 6 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போலிஸாரால் தேடப்பட்டு வரும் ரவுடிகளின் பட்டியலில் ஏ ப்ளஸ் பிரிவில் இருந்தவரான கல்வெட்டு ரவி, பா.ஜ.கவின் துணையோடு போலிஸில் இருந்து தப்பிக்கவே பா.ஜ.கவில் அடைக்கலமானதாக கூறப்பட்டது.

இந்நிலையில், கல்வெட்டு ரவி தான் திருந்தி வாழ விரும்புவதாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

கல்வெட்டு ரவி அளித்துள்ள மனுவில் “திருந்தி நல்ல முறையில் வாழ்ந்து மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க விரும்புகிறேன். என் மீதுள்ள வழக்குகளை ஆஜராகி நீதிமன்றத்தில் விடுதலை பெற்று கொள்கிறேன். எனது மகள்களின் எதிர்காலத்திற்காக வாழ விரும்புகிறேன். நான் இனி எந்த குற்றச்செயலிலும் ஈடுபட மாட்டேன்.

என் பெயரை யாரவாது தவறாக பயன்படுத்தி சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.கவை சேர்ந்த ரவுடி மன்னிப்புக் கேட்டு போலிஸாரிடம் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories