தமிழ்நாடு

“திருச்சியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்” : அமைச்சர் கே.என்.நேரு உறுதி!

திருச்சி மாநகர பகுதிக்குள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

“திருச்சியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்” : அமைச்சர் கே.என்.நேரு உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் ,திசைகாட்டும் வழிக்காட்டி என்கிற தலைப்பில் தி.மு.க சார்பில் இணையவழி வேலை வாய்ப்பு முகாமை கழக முதன்மைச் செயலாளர் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என் நேரு தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “இதுவரை இந்த இணையவழி வேலை வாய்ப்பு முகாமில், 15 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.170 நிறுவனங்கள் அதில் கலந்து கொண்டுள்ளனர்.

திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களின் வளர்ச்சிக்கு என்னென்ன தேவை என்பது எனக்கு தெரியும். மற்ற மாவட்டங்களின் வளர்ச்சிக்கு என்னனென்ன தேவை என்பதை அந்த அந்த மாவட்டங்களை சேர்ந்த சட்டமன்ற உறுபினர்களோ இன்னும் பிற வேறு யாராவது கூறினால் முன்னுரிமை அடிப்படையில் அது செயல்படுத்தப்படும்.

திருச்சி மாவட்டம் நவல்பட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவில் கூடுதலான நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளது. மாநகருக்குள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைக்க வேண்டும் என்கிற யோசனை வந்துள்ளது. அதன்படி, மாநகருக்குள் அத்தகைய நிறுவனங்களுக்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories