மதுரை மாநகராட்சிக்குட்பட்ட சாய்பாபா கோயில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பாகவத் கலந்துக்கொள்ளவுள்ளார்.
இந்நிலையில் அவரது வருகையைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் அதன் உதவி ஆணையர், அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் மதுரை சத்தியசாய் நகரில் உள்ள சாய்பாபா கோயிலில் உள்ள நிகழ்ச்சிகளில் 22 ஆம் தேதி முதல் 26 அம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
அதனால், அவரது வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் இருந்து அவர் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சிகளுக்கான இடங்களை தெரிந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கான வழித்தடங்களில் உள்ள சாலைகளை சீரமைத்தால், தெருவிளக்குகளை பராமரித்தல், சாலைகளை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை செய்திட வேண்டும்.
அவர் பயணிக்கும் நேரங்களில் சாலைகளில் மாநகராட்சி பணிகளான சீரமைப்பு பணிகள் எதுவும் நடைபெறால் இருப்பதை கண்காணித்தல் போன்ற பணிகளை கவனித்து வர அனைத்து முண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த சுற்றறிக்கை அரசியல் கட்சினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதாவது. தமிழ்நாட்டில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் வருகையை முன்னிட்டு பிரதமர், முதலமைச்சர் வருகைக்கு இணையாக சிறப்பு உத்தரவு பிறப்பித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த உத்தரவை திரும்ப பெறவேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், மதுரை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், உயர் பாதுகாப்பு வி.ஐ.பி.களுக்கு செய்யும் வழக்கமான நடைமுறைதான். புதிதாக வந்த உதவி ஆணையாளர் அப்படி செய்திவிட்டார் என விளக்கம் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து பணியில் இருந்து மாநகராட்சி துணை ஆணையரை விடுவித்து மதுரை மாநகராட்சி ஆணையார் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுரை மாநகராட்சியில் உதவி ஆணையராக பணிபுரிந்து வரும் சண்முகம், 21/7/2021 பிற்பகல் முதல் மதுரை மாநகராட்சி பணியிலிருந்து விடுவித்து ஆணையிடப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.