தேனி மாவட்டம் பெரிய குளத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மனைவி மல்லிகா. இந்த தம்பதி ஒரு வருடத்திற்கு முன்புதான் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள வ.உ.சி தெருவில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கி வந்துள்ளனர்.
பாண்டியராஜனும், மனைவி மல்லிகாவும் ஒரே உணவு விடுதியில் வேலை பார்த்து வந்துள்ளனர். விடுதியின் உரிமையாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் உணவு விடுதி மூடப்பட்டது. இதனால் வேலை இல்லாமல் தம்பதிகள் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் தண்ணீர் வருகிறது என சொல்வதற்காக பாண்டியராஜன் வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். அப்போது யாரும் கதவைத் திறக்கவில்லை. மேலும் வீட்டின் உள்ளிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் பதற்றம் அடைந்த வீட்டின் உரிமையாளர் வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது, அழுகிய நிலையில் மல்லிகாவின் சடலம் இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர், இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பிறகு சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் மல்லிகாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து மாயமான பாண்டியராஜனை தேடி வருகின்றனர். மேலும் வேறு யாராவது கொலை செய்தார்களா என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணையைத் துவக்கியுள்ளனர்.