தமிழ்நாடு

“தமிழ்நாட்டின் நீர்வளம், நதிநீர் சிக்கல்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும்”: அமைச்சர் துரைமுருகன்!

தமிழ் நாடு அரசின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன், ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் அவர்களை சந்தித்து வலியுறுத்தினார்.

“தமிழ்நாட்டின் நீர்வளம், நதிநீர் சிக்கல்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும்”: அமைச்சர் துரைமுருகன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ் நாட்டில் நீர்வளம் சம்பந்தமான பிரச்சனைகளை விவாதித்து அரசின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன், ஒன்றிய அரசின் ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் அவர்களை சந்தித்து வலியுறுத்தினார்!

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ் நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன், ஒன்றிய அரசின் ஜல்சக்தித் துறை அமைச்சர் திரு. கஜேந்திரசிங் ஷெகாவத் அவர்களை சந்தித்து தமிழ் நாட்டில் நீர்வளம் சம்பந்தமான பிரச்சனைகளை விவாதித்து கீழ்க்கண்ட பொருள்கள் சம்பந்தமான கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற வலியுறுத்தினார்கள்.

1) காவிரியில் தமிழ் நாட்டிற்கு மாதாந்திர வாரியாக நீரை பில்லிகுண்டுலுவில் அளிப்பதற்கு கர்நாடக அரசை வலியுறுத்தவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தமிழ் நாட்டிற்கு கர்நாடகம் நீர் அளிப்பதை இறுதி செய்யவும் ஜல்சக்தி அமைச்சகம் தேவையான அறிவுரைகள் வழங்க வலியுறுத்தப்பட்டது.

2) கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டம் தமிழகத்திற்கு பாதகத்தை விளைவிக்கும் என்றும் தமிழக விவசாயிகள் நலனுக்கு எதிரானது என்றும் தெரிவித்து இத்திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் கொடுக்கக்கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

3) பெண்ணையாற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டியுள்ளது பற்றியும் மற்றும் பெண்ணையாற்றின் குறுக்கே சில கட்டுமானங்களையும், நீர் இரைத்தலையும் தவிர்க்கவும் ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண உச்சநீதி மன்றம் 2019ல் ஆணையிட்டுள்ளபடி விரைவில் நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தப்பட்டது.

“தமிழ்நாட்டின் நீர்வளம், நதிநீர் சிக்கல்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும்”: அமைச்சர் துரைமுருகன்!

4) முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடி ஏற்றுவதற்கு சிற்றணை (Baby Dam) மற்றும் மண் அணை (Earth Dam) வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள 23 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளிக்க கேரள அரசு மேலும் தாமதிக்காமல் இருக்க கேரள அரசுக்கு அறிவுறை வழங்கவும் அணைக்கு செல்ல வனப்பகுதியில் உள்ள சாலையை சரிசெய்ய உடன் அனுமதி அளிக்கவும் கேரள அரசை வலியுறுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

5) காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைத்து 3 வருடங்கள் ஆகிறது. அதற்கு ஒரு நிரந்தர தலைவரை இன்னும் மத்திய அரசு அமைக்கவில்லை. ஆணையத்திற்கு தேவையான தலைவரை உடன் நியமிக்க வலியுறுத்தப்பட்டது.

6) கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு - காவிரி இணைப்பு திட்டத்தில் தமிழ் நாட்டிற்கு 83 டிஎம்சிக்கும் கூடுதலாக நீர் ஒதுக்கவும் தமிழ் நாட்டில் இணைப்புக்கால்வாயை உயர்மட்டத்தில் எடுத்துச்சென்று கல்லணையில் இணைக்காமல் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கட்டளை கதவணையில் இணைக்குமாறும், இத்திட்டம் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த இணைப்பு திட்டத்தை இறுதி செய்து உடன் தேசிய திட்டமாக செயலாக்கவும் வலியுறுத்தப்பட்டது.

7) தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு நிதியளிக்க நீண்டகாலமாக தமிழ் நாடு அரசு மத்திய அரசை கேட்டுவருகிறது. இது வெள்ளநீரை உபயோகிக்க கூடிய ஒரு பயனுள்ள திட்டமாகும். இத்திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இறுப்பினும் நிதி இன்னும் அளிக்கப்படவில்லை. இப்பயனுள்ள திட்டத்தை விரைவில் முழுமையாக முடிக்க நிதி ஒதுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. இத்திட்டத்திற்கு தமிழ் நாடு அரசு இதுவரை ரூ. 712 கோடி செலவிட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு நிதியாக ரூ. 487 கோடி உடன் அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

8) இதே போல் நீர்நிலைகள் செப்பனிடுதல், புதுப்பித்தல் மற்றும் புணரமைத்தல் (Repair, Renovation and Restoration) திட்டத்தின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டன. ஆனால் இத்திட்டதிற்குறிய நிதி ரூ. 34.25 கோடி மட்டும் தான் அளிக்கப்பட்டுள்ளது. மீதி ரூ 44.48 மத்திய அரசிடமிருந்து (Reimbursement) இதுவரை கிடைக்கவில்லை. இந்த நிதியை உடன் அளிக்க வலியுறுத்தப்பட்டது.” எனத் தெரிவித்துள்ளன.

banner

Related Stories

Related Stories