தி.மு.க ஆட்சிக்கு வந்தில் இருந்தே மக்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வரை கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் நிறைவேற்றி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், ஆனந்தவாடி கிராமத்திலிருந்து ஜெயங்கொண்டத்துக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் அ.தி.மு.க ஆட்சியில் இருந்து கோரிக்கை விடுத்து வந்தனர். பின்னர் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் பொதுமக்கள் கூடுதல் பேருந்து வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள ஆனந்தாவாடி கிராமத்தில் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக கூடுதல் பேருந்து வசதியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேருந்தை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச்சென்றார். அமைச்சர் பேருந்து ஓட்டிச் சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அமைச்சர் பேருந்தை ஓட்டும் வீடியோவில், அண்ணா சூப்பர்னா...சூப்பர்னா.. என பொதுமக்கள் உற்சாகமாக கைதட்டி வரவேற்கின்றனர்.மேலும் அமைச்சரின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.