தமிழ்நாடு

தளர்வுகள் அறிவிக்கப்பட்டதே என ஊர் சுற்றினால் நிலைமை விபரீதமாகிவிடும் - தினகரன் நாளேடுஎச்சரிக்கை

மக்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால் கொரோனாவை வென்றுவிடலாம் என தினகரன் நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

தளர்வுகள் அறிவிக்கப்பட்டதே என ஊர் சுற்றினால் நிலைமை விபரீதமாகிவிடும் - தினகரன் நாளேடுஎச்சரிக்கை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"மக்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால் கொரோனாவை வென்றுவிடலாம்" என்று "தினகரன்" ஏடு தலையங்கம் எழுதியுள்ளது.

இது குறித்து "தினகரன்" ஏடு எழுதியுள்ள தலையங்கம் வருமாறு:-

கடந்த மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற போது, கொரோனா கோரதாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் கொரோனா பாதித்தவர்கள். நமக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என்பது தெரியாமலேயே பலர் உயிரிழந்த காலக்கட்டம். ஆட்சிப் பொறுப்பேற்றதும் அந்த மகிழ்ச்சியை கொண்டாடக் கூட முடியாத சூழ்நிலை.

முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால், தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிந்தன. அதே நேரத்தில், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் ஆக்சிஜன் இல்லை. போதுமான மருந்து, மாத்திரைகள் இல்லை. இதனால், கொரோனாவில் இருந்து மக்களை மீட்பது, காப்பது என்பதே அரசின் முதல் பணி என்ற இலக்கோடு முதல் நாள் முதலே தி.மு.க. ஆட்சி பயணிக்க துவங்கியது. அமைச்சர்கள், அதிகாரிகளை முடுக்கிவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனாவால் எதிர்கொண்ட சவால்களை திறமையாக சமாளித்தார்.

தளர்வுகள் அறிவிக்கப்பட்டதே என ஊர் சுற்றினால் நிலைமை விபரீதமாகிவிடும் - தினகரன் நாளேடுஎச்சரிக்கை

மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை தட்டுப்பாடு தீர்ந்தது. ஆட்சியின் முதல் முடிவுகளில் ஒன்றாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணத்தை உடனடியாக ரேஷன் கடைகள் மூலம் வழங்க மனிதநேயத்தோடு உத்தரவிட்டார் முதல்வர். அதே நேரத்தில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கை தவிர வேறு வழியில்லை என்பதை மருத்துவ நிபுணர்களும், அதிகாரிகளும் வலியுறுத்த, மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதன் விளைவாக கொரோனா பெருந்தொற்று ஓரளவுக்கு கட்டுக்குள் வர, அடுத்தடுத்து சலுகைகளை அரசு அறிவித்தது.

தொற்று பரவல் அதிகம் உள்ள 11 மாவட்டங்கள், ஓரளவு தொற்று உள்ள 23 மாவட்டங்கள், தொற்று பரவல் குறைந்த 4 மாவட்டங்கள் என்று மூன்றாக பிரித்து ஒவ்வொரு வாரமும் அடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்று முதல், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகளை இரவு 8 மணி வரை திறக்கலாம், எல்லா மாவட்டங்களிலும் பஸ்கள் இயக்கம், இ-பாஸ், இ-பதிவு முறை நீக்கம் என்று அதிரடி தளர்வுகளை முதல்வர் அறிவித்துள்ளார். மக்கள் மீது நம்பிக்கை கொண்டு இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மக்களின் வாழ்வாதாரம் இனிமேலும்பாதிக்கப்படாமல் இருக்கஇந்த தளர்வுகள் உதவும்.அதே நேரத்தில்,கொரோனா தொற்றுபரவல் தற்போது கட்டுக்குள் உள்ள இந்த நிலைதொடர்வது மக்க ளின்கையில்தான் உள்ளது.அவசிய தேவை உள்ளவர்கள் மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும். அரசுதான்தளர்வுகளை அறிவித்துவிட்டதே என்று ஊர் சுற்றினால் நிலைமை விபரீதமாகி விடும்.வெளியே வருபவர்களும், மாஸ்க் அணிதல்,தனி மனித இடைவெளிஉள்ளிட்ட கட்டுப்பாடுகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். மக்களாகிய நாம் கட்டுப்பாடுடன் இருந்தால் கொரோனாவை வென்று விடலாம்.

banner

Related Stories

Related Stories