தமிழ்நாடு

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் பெற்றோருக்கு ஊக்கத் தொகை.. ஆசிரியர்களின் முயற்சிக்கு குவியும் பாராட்டு!

கம்பம் அருகே அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களின் பெற்றோருக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் ஆயிரம் வழங்கி வரும் ஆசிரியர்கள் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் பெற்றோருக்கு ஊக்கத் தொகை.. ஆசிரியர்களின் முயற்சிக்கு குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

அந்த வகையில், காமயகவுண்டன்பட்டி அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில் பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) வீரமணி தலைமையில், ஆசிரியர்கள் மாதவன், ராஜா, ஷபி அகமது, ஆசிரியை ராதிகா ஆகியோர் பள்ளியில் சேரும் மாணவர்களின் பெற்றோருக்கு உதவித்தொகை வழங்க முடிவு செய்தனர்.

அதன்படி அவர்கள் தங்களது சம்பள பணத்தில் இருந்து 6-ம் வகுப்பு சேர்க்கைக்கு வரும் மாணவர்களின் பெற்றோருக்கு உதவித்தொகையாக ரூ.1000 வழங்கி வருகிறார்கள். இது குறித்து அப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், “கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு நாங்கள் வழங்கும் ஊக்கத்தொகை உதவியாக இருக்கும் என்று கருதி வழங்கி வருகிறோம் என்றனர்.

இதனால் தனியார் பள்ளிகளை நோக்கி சென்ற பெற்றோர் தற்போது அரசுப் பள்ளிக்கு படை எடுத்து வருவதாக பெருமிதம் கொள்கின்றனர்.

banner

Related Stories

Related Stories