தமிழ்நாடு

“மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று கூறுவதற்கு தடை விதிக்க முடியாது”: மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் அதிரடி!

ஒன்றிய அரசு என்று அழைப்பதற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

“மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று கூறுவதற்கு தடை விதிக்க முடியாது”: மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்கக் கூடாது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது, இந்தியா, பாரதம் என்ற வார்த்தைகளே அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளது. எனவே இது குறித்து விரிவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ராமசாமி என்பவர் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை என்று நீதிபதிகள் சிவஞானம் ஆனந்தி அவர் அமர்வு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர்களும் எவ்வாறு அழைப்பது, இவ்வாறு தான் பேசவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

மேலும், மனுதாரர் எதனை கற்றுக் கொடுக்க விரும்புகிறார் என்றும் கேள்வி எழுப்பினர். அதுமட்டுமல்லாது, மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதற்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

banner

Related Stories

Related Stories