தமிழ்நாடு

மீனவர்களுக்கு ஒன்றிய அரசு தரும் நிதியைப் பெறத் தவறி - ரூ.92.66 கோடி இழப்பை ஏற்படுத்திய அ.தி.மு.க அரசு!

மீனவர்களுக்கு ஒன்றிய அரசு தரும் நிதியைப் பெறத் தவறி - ரூ.92.66 கோடி இழப்பை அ.தி.மு.க. அரசு ஏற்படுத்தியதாக இந்திய தணிக்கைத் துறை தகவல் தெரிவித்துள்ளார்.

மீனவர்களுக்கு ஒன்றிய அரசு தரும் நிதியைப் பெறத் தவறி - ரூ.92.66 கோடி இழப்பை ஏற்படுத்திய அ.தி.மு.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மீனவர்களுக்கான அரசின் ஒன்றிய அரசின் சேமிப்பு திட்டத்தின் கீழ் நிதி பெற தவறியதால் தமிழக அரசுக்கு ரூ.92.66 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பது இந்திய தணிக்கைத் துறை அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது.

இது குறித்து இந்திய தணிக்கை துறை அறிக்கையில் கூறியிருப்பதாவது: - “ஒன்றிய மீனவர்களுக்கான ஒன்றிய அரசின் திட்டமான தேசிய சேமிப்பு மற்றும் நிவாரண திட்டம் அரசின் வழிகாட்டி நெறி முறைகளின்படி மாநிலத்தில் செயல்படுத் தப்படுகிறது.

இத்திட்டத்தின் படி மீனவரின் பங்களிப்பான ரூ.1,500 மற்றும் ஒன்றிய அரசின் பங்களிப்பான ரூ.1500 சேர்த்து மீன் பிடிப்பு குறைந்த காலங்களில் மீனவர்களுக்கு அளிக்கப்படும். தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசின் பங்களிப்பு தொகையையும் சேர்த்து நிதி ஒப்பளிப்பு செய்து மீனவ மக்களுக்கு வழங்குகிறது.

கடந்த 2012-13 முதல் 2017-18 வரை ஒன்றிய அரசின் பங்களிப்பான ரூ.110 கோடி தமிழக அரசால் வழங்கப்பட்டது. எனினும் 2012 - 13 முதல் 2013 - 14 வரை ஒன்றிய அரசு வெறும் ரூ.17.65 கோடி மட்டுமே விடுவித்தது. மீதத் தொகையான ரூ.92.66 கோடி கடந்த 2018 ஆகஸ்டில் ஒன்றிய அரசிடம் இருந்து பெறப்படாமல் நிலுவையில் உள்ளது.

மீனவர்களுக்கு ஒன்றிய அரசு தரும் நிதியைப் பெறத் தவறி - ரூ.92.66 கோடி இழப்பை ஏற்படுத்திய அ.தி.மு.க அரசு!

இந்த திட்டத்திற்கான ஒன்றிய அரசின் பெறப்படாததால் ஒன்றிய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளுடன் செயல்படுத்தப்பட்ட ஒரு திட்டத்திற்கு ரூ.92.66 கோடி மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த 2016-17ம் ஆண்டில் இருந்து அனைத்து மீன்வளத் திட்டங்களும் நீலப் புரட்சி என்கிற குடையின் கீழ் மறுக்கட்டமைப்பு செய்யப்பட்ட தால் ஒன்றிய அரசு நிதி விடுவிக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்தது. ஆனால், திட்டங்களின் மறு கட்டமைப்புக்கு முந்தைய காலங்களான 2014-2015 மற்றும் 2015 - 2016 ஆண்டுகளிலும் நிதி பெறப்படாததால் தமிழக அரசு கூறியது ஏற்புடையதல்ல.

மேலும் ஒன்றிய அரசின் பங்களிப்பை பெற போதுமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வில்லை என்பதே இதை குறிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் பங்களிப்பை பெற போதுமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதே இதை குறிக்கிறது.

banner

Related Stories

Related Stories