ஆரணி அருகே தமிழ்நாடு பசுமை இலவச வீடு மற்றும் பாரதப் பிரதமரின் இலவச வீடு பணி ஆணை வழங்க அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் பகிரங்கமாக 25 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக பாதிக்கப்பட்ட பயனாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே படவேடு ஊராட்சியில், சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாசித்து வருகின்றனர். படவேடு ஊராட்சியின் கீழ் சுமார் 30க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. தற்பொழுது படவேடு ஊராட்சி மன்ற தலைவராக அ.தி.மு.க கட்சியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இந்த படவேடு ஊராட்சியில் 2019-2020 ஆண்டில் மட்டும் தமிழ்நாடு பசுமை இலவச வீடு திட்டத்தின் கீழும் மத்திய அரசு வழங்கும் பாரத பிரதமர் இலவச வீடு திட்டத்தின் கீழும் படவேடு பஞ்சாயத்தில் 289 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், படவேடு ஊராட்சி உள்ள 190 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதில், தமிழ்நாடு பசுமை இலவச வீடு திட்டம் மற்றும் பாரத பிரதமர் இலவச வீடு வழங்கும் பயனாளிக்கு பணி ஆணை வழங்க ஒரு நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் வசூல் செய்து இருப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும் இலவச வீடு வழங்குவதற்கு தகுதியின் அடிப்படையில், தராமல் தகுதியற்ற அ.தி.மு.கவினர் மற்றும் நிலச்சுவான்தார்கள் பணம் படைத்தவர்கள்யிடம் 25000 பணம் பெற்றுக் கொண்டு பணி ஆனை வழங்கியிருப்பதாக பாதிக்கப்பட்ட பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு படவேடு பஞ்சாயத்தில் விசாரணை செய்து தகுதியற்ற நபர்களுக்கு கொடுக்கப்பட்ட பணி ஆணையை ரத்து செய்து தகுதி வாய்ந்த பயனாளிக்கு இலவச வீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்ட அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் படவேடு ஊராட்சி பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.