அ.தி.மு.க ஆட்சியில் தொற்று உச்சத்தில் இருந்தபோதே, டாஸ்மாக் திறக்கப்பட்டு நிலையில், தற்போது தொற்று பாதிப்பு குறைந்த காரணத்தினாலேயே 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் உச்சகட்டமாக 36 ஆயிரம் பேருக்கு தொற்றிருந்தது. ஆனால் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை காரணமாக தற்போது தொற்றூ பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கொரோனா பாதிப்பு உச்சபட்சமாக இருக்கும்போதே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. ஆனால், தற்போது தொற்று குறைந்த காரணத்தினாலேயே டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மக்களின் நலனில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்கரை செலுத்தி வருகிறார்.
மேலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டும், 27 மாவட்டங்களில் உள்ள மதுபான கடைகளில் கிருமிநாசினி கொடுக்கப்பட்டு, காவல்துறை உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் மதுபானம் வாங்க வருவோர், முககவசம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். தனிமனித இடைவெளி விட்டு தான் வாங்கிச் செல்ல வேண்டும்
குறிப்பாக கட்டாய முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானங்கள் வழங்கப்படும். முகக்கவசம் மனிதர்களுக்கு மதுபானம் வழங்கப்படாது. அதேப்போல், தமிழகத்தில் தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் இருந்து, தொற்று குறையாமல் உள்ள 11 மாவட்டங்களில் மதுபானங்கள் கடத்தல் மற்றும் கள்ளச்சந்தையில் மது விற்பனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுமட்டுமல்லாது, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்படும் மதுவினை, தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, கடத்தல் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கள்ள சாராயம் இல்லாத மாநிலமாக மாறும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுகிறது.
மேலும் கொரோனா பாதிப்பு உச்சகட்டமாக இருந்த போதிலும் கர்நாடகாவில் மதுபானகடைகள், தடையின்றி செயல்கிறது. பா.ஜ.க ஆட்சியில் உள்ள கர்நாடகாவில் தொற்று குறையாத நிலையில், மதுபான கடைகள் 2 மணி வரை விற்பனை செய்ய கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மதுபான கடை திறப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தும் பா.ஜ.க, பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தாதது ஏன்? தமிழகத்தில் பா.ஜ.க அரசியலுக்காகவும், தனது இருப்பைக் காட்டிக் கொள்வதற்காகவும் தான் இந்த போராட்டம் நடத்துகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.