தமிழ்நாடு

“குண்டு துளைக்காத கார்; துப்பாக்கி சுடும் பயிற்சி” : கேங்ஸ்டர் சிடி மணி விசாரணையில் ‘பகீர்’ தகவல் !

குண்டு துளைக்காத கார் தயாரிக்க திட்டம், மதுரையில் உள்ள தென்னந்தோப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி என பிரபல ரவுடி சிடி மணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

“குண்டு துளைக்காத கார்; துப்பாக்கி சுடும் பயிற்சி” : கேங்ஸ்டர் சிடி மணி விசாரணையில் ‘பகீர்’ தகவல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி சி.டி.மணி. இவர் சைதாப்பேட்டை தேனாம்பேட்டை பகுதிகளில் சிடி விற்பனை செய்து வந்ததால் சிடி மணி என்று அழைக்கபட்டார். நாளடைவில் அவர் சிலருடன் கைகோர்த்து கொலை கொள்ளை ஆள் கடத்தல் வழிப்பறி போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். அவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

மேலும், சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் சுற்றித்திரியும் ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாயும் என காவல்துறையினர் அதிரடியாக தெரிவித்தனர். மேலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சி.டி மணி தலைமறைவாக இருந்து உள்ளார்.

இதனால் தனிப்படை போலிஸார் ரகசிய தகவல் கிடைத்தன் அடிப்படையில், ரவுடி சிடி மணியை போலிஸார் பிடிக்க சென்றபொழுது, ரவுடி சிடி மணி தான் வைத்திருந்த துப்பாக்கியால் காவலர் ஒருவரை சுட்டுவிட்டுள்ளார். இந்த தாக்குதலில் தனிப்படை உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் என்பவர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“குண்டு துளைக்காத கார்; துப்பாக்கி சுடும் பயிற்சி” : கேங்ஸ்டர் சிடி மணி விசாரணையில் ‘பகீர்’ தகவல் !

இதற்கிடையில் சிடி மணிகை கைது செய்து, நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சிடி மணி ஆர்டி, பெண்ஸ், பி.எம்.டபள்யூ போன்ற பல விலையுயர்ந்த கார்களை வைத்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு காரில் சென்ற சிடி மணியை கொல்ல பெட்ரோல் குண்டு வீசப்பட்டபோது, ஃபார்ச்சூனர் காரை அவர் வைத்திருந்தார்.

அந்த கார் தற்போது இல்லாததால் காவல்துறையினர் அதுகுறித்து விசாரித்துள்ளனர். அப்போது அந்த காரை குண்டு துளைக்காத காராக மாற்றி வடிவமைக்க டெல்லிக்கு அனுப்பியுள்ளதாகவும், அந்த பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் சிடி மணி வாக்குமூலம் அளித்துள்ளார்.

அடுத்ததாக சிடி மணி வைத்திருந்த 11 குண்டுகள் அடங்கிய கைத்துப்பாக்கியில் 3 குண்டுகள் மட்டும் சுட்டால் சத்தம் மட்டுமே வரும் வகையில் டம்மி குண்டுகளாக இருந்துள்ளன. அதுகுறித்து காவல் துறையினர் ஏன் எனக் கேள்வி எழுப்பியபோது, மிரட்டி பணம் பறிக்கவும், காவல் துறையினரிடம் பிடிபட்டால் தப்பிக்கவும் அந்த குண்டுகளை பயன்படுத்தி அச்சுறுத்த வைத்திருப்பதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

“குண்டு துளைக்காத கார்; துப்பாக்கி சுடும் பயிற்சி” : கேங்ஸ்டர் சிடி மணி விசாரணையில் ‘பகீர்’ தகவல் !

மேலும், மதுரையில் தனது நண்பரின் தென்னந்தோப்பு ஒன்றில் துப்பாக்கி சுட பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வாக்குமூலத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். சிடி மணியின் குண்டு துளைக்காத கார் டெல்லியில் எங்குள்ளது என்ற விசாரணையை தற்போது துவங்கியுள்ள காவல் துறையினர், அதை சென்னைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் குறித்தும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அதேபோல மதுரையில் உள்ள சிடி மணியின் கூட்டாளி யார் என்ற விசாரணையையும் துவங்கி அவரைப் பிடித்து விசாரணை மேற்கொள்ளவும் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories