தமிழ்நாடு

சொந்த காரிலேயே கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தி.மு.க தொண்டர்: பொதுமக்கள் நெகிழ்ச்சி!

தி.மு.க தொண்டர் ஒருவர் தனது சொந்த காரிலேயே கொரோனா நோயாளிகளை அழைத்து மருத்துவமனையில் சேர்த்து வருகிறார்.

சொந்த காரிலேயே கொரோனா  நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தி.மு.க தொண்டர்: பொதுமக்கள் நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்குத் தேவைப்படும் உதவிகளை தி.மு.கவினர் செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், மதுரவாயல் மேட்டுக்குப்பம் 147வது வார்டை சேர்ந்த திமு.க தொண்டர் எம்.ஆர்.சதீஷ் , அந்த வட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை, தனது சொந்த வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.

முன்னதாக மே 15ம் தேதி சதீஷ் தனது ஃபேஸ்புக் பதிவில், 147வது வார்டு பகுதியில் யாராவது கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்றால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் என தனது தொலைபேசி எண்ணுடன் பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவைத்தொடர்ந்து, அப்பகுதி மக்கள் இவருக்கு தொடர்பு கொண்டுள்ளனர். பின்னர் சதீஷ் தனது சொந்த காரிலேயே உரிய பாதுகாப்பு வசதிகளுடன் கொரானா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வருகிறார்.

இது வரை 40 பேர் வரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையில் சேர்த்துள்ளேன் என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் சதீஷ். மேலும் சதீஷின் இந்தச்செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories