தமிழ்நாடு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது: PSBB பள்ளிக்கு சம்மன் அனுப்ப முடிவு - போலிஸார் அதிரடி!

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது: PSBB பள்ளிக்கு சம்மன் அனுப்ப முடிவு - போலிஸார் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் (சி.பி.எஸ்.சி) பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக இருக்கிறார் ராஜகோபாலன். இவர் தனது வகுப்பு மாணவிகளுக்கு ஆன்லைனில் பாடம் எடுக்கும போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், தவறாக நடந்து கொண்டதாகப் புகார்கள் எழுதுள்ளன.

இதையடுத்து தி.மு.க மக்களை உறுப்பினர் கனிமொழி எம்.பி, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். அதபோல், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஆசிரியர் ராஜகோபாலன் மீதான புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படம் என தெரிவித்திருந்தார். இதையடுத்து நேற்று ஆசிரியர் ராஜகோபாலனை போலிஸார் கைது செய்தனர்.

பின்னர் ஆசிரியர் ராஜகோபால் மீது போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளில் போலிஸார் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் 14 நாள் நீதிமன்ற காவலும் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின்பேரில் போலிஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பத்ம சேஷாத்ரி ஆசிரியர் ராஜகோபாலன் விவகாரத்தில், பள்ளியின் முதல்வர் கீதாவுக்கு சம்மன் அனுப்பி, ராஜகோபாலன் தொடர்பான விபரங்களை விசாரிப்பதற்கு நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories