தமிழ்நாடு

“கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை அளிக்க வேண்டும்” : அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவு!

தனியார் மருத்துவமனைகளில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு கட்டாயம் கொரோனா சிகிச்சை அளிக்க வேண்டும் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

“கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை அளிக்க வேண்டும்” : அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்று வருகிறத. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அரசு அதிகாரிகள், மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பின்னர் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் மருத்துவ வசதி பெறுவதற்கும் அவர்களைக் காப்பாற்றுவதற்கு முதல்வரின் உத்தரவின் பேரில் இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தற்போது தேவையான அளவு ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளது.

மேலும் வரும் காலத்தில் தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் படுக்கைகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரக்கூடிய பொதுமக்களுக்கு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டாயம் சிகிச்சை அளிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories