தமிழ்நாடு

“அண்ணா பல்கலை. மாணவர்களுக்கு ஜூன் 14 முதல் ஆன்லைன் தேர்வு” - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி!

அண்ணா பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 14 முதல் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

“அண்ணா பல்கலை. மாணவர்களுக்கு ஜூன் 14 முதல் ஆன்லைன் தேர்வு” - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பொறியியல் கல்லூரிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் செமஸ்டர் தேர்வு நடைபெற்ற நிலையில் அந்த தேர்வில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார்.

அதன்படி, அண்ணா பல்கலைக்கழக முதுகலை, இளங்கலை பொறியியல் பட்டபடிப்புகளுக்கு ஜூன் 14ம் தேதி முதல் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “2017 ரெகுலேஷன் அண்ணா பல்கலைக்கழக முதுகலை, இளங்கலை பொறியியல் பட்டப்படிப்புகளுக்கு ஜூன் 14ம் தேதி முதல் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும்.

மற்ற ரெகுலேஷனுக்கான தேர்வுகள் 21ம் தேதி துவங்கும். கடந்த முறை தேர்வு எழுதாமலும், கட்டணம் செலுத்தாமலும் உள்ள மாணவர்கள் ஜூன் 3ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தலாம்.

ஏற்கனவே தேர்வெழுதிய மாணவர்கள் பணம் கட்டத் தேவையில்லை. வேலைவாய்ப்பு உள்ளிட்ட மாணவர்களின் நலன் கருதி தான் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

ஒருசில பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. மற்ற பல்கலைக்கழகங்களிலும் ஜூலைக்குள் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories