தமிழ்நாடு

தீவிரமடையும் கொரோனா: 1.2 லட்சம் டோஸ் கோவாக்சீன் தமிழகம் வருகை - தடுப்பூசிகள் வாங்க தமிழக அரசு நடவடிக்கை!

மும்பையிலிருந்து மேலும் 1.2 லட்சம் டோஸ் கோவாக்சீன் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தது.

தீவிரமடையும் கொரோனா: 1.2 லட்சம் டோஸ் கோவாக்சீன் தமிழகம் வருகை - தடுப்பூசிகள் வாங்க தமிழக அரசு நடவடிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு மத்திய அரசிடம், தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து மத்திய அரசு, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மும்பையில் உள்ள மத்திய மருந்து தொகுப்பு கிடங்கிலிருந்து 1.20 லட்சம் டோஸ் கோவாக்சீன் தடுப்பூசி மருந்துகளை இன்று தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியது.

அந்த தடுப்பூசி மருந்துகளை ஏற்றிக்கொண்டு, இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் இன்று மதியம் சென்னை விமான நிலையம் வந்தது. 10 பாா்சல்களில் வந்த 290 கிலோ எடையுடைய அந்த 1.2 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகளை தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்னை பழைய விமான நிலையத்தில் பெற்றுக்கொண்டனா்.

அதன்பின்பு குளிா்சாதன வசதியுடைய வாகனத்தில் ஏற்றப்பட்டு சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் அலுவலகத்தில் உள்ள மருந்து பாதுகாப்பு வைப்பு அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நாளை இந்த தடுப்பூசி மருந்துகள் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என்று சுகாதாரத்துறையினா் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories