தமிழ்நாடு

“தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு 3 நாட்களில் சரி செய்யப்படும்” : அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!

தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு 3 நாட்களில் சரி செய்யப்படும் எனவும் சீனா, நெதர்லாந்து நாட்டில் இருந்து 12 கன்டெய்னர்களிலிருந்து ஆக்சிஜன் வரவுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

“தமிழகத்தில் ஆக்சிஜன்  தட்டுப்பாடு 3 நாட்களில் சரி செய்யப்படும்” : அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகம் முழுவதும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி, முதல் தவணையான 2000 ரூபாய் இன்று முதல் நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, சிவகாசி மாவட்டம் செங்கமலநாச்சியார்புரம் பகுதியிலுள்ள நியாய விலை கடையில் தமிழக அரசின் கொரானா சிறப்பு நிவாரண முதல் தவணை தொகையை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழகம் முழுவதும் 3 நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு சரி செய்யப்படும். மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் 40 டன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அவை 3 நாட்களில் சரிசெய்யப்படும். அதுமட்டுமல்லாது, நெதர்லாந்து நாட்டில் இருந்து 4 தாழ் வெப்பநிலை கொதிகலன்கள், சீனாவில் இருந்து 12 கண்டெய்னர் மூலமாக ஆக்சிஜன் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, தொழில் துறை மற்றும் சுகாதாரத் துறையும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும், ரெம்டிசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தால், யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories