தமிழகத்தின் 16வது சட்டமன்றத்தை அலங்கரிக்க தயாராகி வருகிறது திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணி கட்சிகளும். தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கட்டிலில் அமரவிருக்கும் திமுகவுக்கும் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் தொடர்ந்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஊடகத்துறையில் செய்தியாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி சின்னத்திரையில் ஜொலித்து தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக உருவெடுத்திருக்கிறார் பிரியா பாவானி சங்கர்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தேர்தலில் தி.மு.க பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், நீண்ட காலத்துக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு. பேரிடரிடையே பதவி ஏற்றாலும் இங்கிருந்து சிறப்பாக வழிநடத்துவீர்கள் என்று சாமானியர்கள் முன் எப்போதும் விட பல மடங்கு நம்பிக்கையுடன் உங்களை பார்த்துக்கொண்டிருக்கிறோம். வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை ரீ ட்வீட் செய்த பயனர் ஒருவர் முட்டாள் தனமான வாதம். முதல்வரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க முடியாது எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பிரியா பவானி சங்கர் take a seat என்றால் seat-அ தூக்கிக்கிட்டு நில்லுன்னு அர்த்தம் இல்ல.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்னா மக்கள் உக்காந்து inky pinky போட்டு எடுத்தாங்கன்னு அர்த்தம் கிடையாது.6th std civics book விட நிறைய படிச்சிருக்கேன் sir.மத்தப்படி எது முட்டாள்தனமான வாதம்னு நான் சொல்ல எதுவும் இல்லை என குறிப்பிட்டார்.
இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வர தரமான பதிலடி என நெட்டிசன்கள் பிரியா பவானி சங்கரை பாராட்டி வருகின்றனர்.