தமிழ்நாடு

“யாரை திருப்தி செய்ய பெரியார் நெடுஞ்சாலையின் பெயர் மாற்றம்?”: எடப்பாடி அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம் !

சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள “பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை” என்ற சாலையின் பெயரை மாற்றிய எடப்பாடி பழனிசாமி அரசுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“யாரை திருப்தி செய்ய பெரியார் நெடுஞ்சாலையின் பெயர் மாற்றம்?”: எடப்பாடி அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள “பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை” என்ற சாலையின் பெயரை நெடுஞ்சாலைத் துறை இணைய தளத்தில், “கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு” என்று பெயர் மாற்றிய எடப்பாடி பழனிசாமி அரசுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவை ஓராண்டு விழாவாக - தொடர் விழாவாக நடத்திய எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்த அ.தி.மு.க. அரசு 1979 இல் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை என்ற பெயரை “பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை” என்று பெயர் மாற்ற மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., அவ்வாறு மாற்ற அரசு ஆணை பிறப்பித்தார்.

அதனை இப்போதைய எடப்பாடி பழனிசாமி அரசு - நெடுஞ்சாலைத் துறை இணைய ” என்று பெயர் மாற்றம் செய்தது ஏன்? யாரைத் திருப்தி செய்ய? என்ன பின்னணி - விஷமத்திற்கு யார் காரணம்? யார் பொறுப்பு? அதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். உடனடியாக அதை இணைய தளத்தில் இருந்து நீக்கி, ‘‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’’ என்று மாற்றாவிட்டால் கடுங்கிளர்ச்சி வெடிப்பது உறுதி! உறுதி!!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories