தமிழ்நாடு

“அரசு பணியில் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்கவேண்டும்” : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

அரசுப் பணியில் பதவி உயர்வு என்பது மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்தது.

“அரசு பணியில் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்கவேண்டும்” : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அரசுப் பணியில் பதவி உயர்வு என்பது மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்தது.

தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கான நியமனத்தில் சாதி அடிப்படையில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. இவ்வாறு டி.என்.பி.எஸ்.சி, டி.ஆர்.பி போன்ற தேர்வு முகமைகள் மூலம் நேரடியாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான முதுநிலைப் பட்டியல் தயாரிக்க இடஒதுக்கீடு, இனசுழற்சி அடிப்படையிலான உள்ஒதுக்கீடு முறையை அரசு கடந்த 2003 ஆண்டு முதல் கடைபிடிக்கிறது.

இதை எதிர்த்து, டி.என்.பி.எஸ்.சி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று ரேங்க் பட்டியலில் முன்னிலை வகிக்கும் அரசு ஊழியர்கள் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு தமிழ்நாடு மாநில சார்நிலைப்பணி விதிகள் பிரிவு படி மதிப்பெண் ரேங்க் அடிப்படையில் முதுநிலைப் பட்டியல் தயாரித்து பதவி உயர்வு வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது.

“அரசு பணியில் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்கவேண்டும்” : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த 2016-ஆண்டில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் கடந்த 2016 ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் இயற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்படி அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வுக்கும் இடஒதுக்கீடு, இனசுழற்சி உள்ஒதுக்கீடு முறைகளை பின்பற்றலாம் என விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.

இதை எதிர்த்து, அரசு ஊழியர்கள் கனகராஜ், பழனிகுமார் உள்ளிட்ட 10 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்எம்டி டீக்காராமன் ஆகியோர் கடந்த 2019-ம் ஆண்டு பிறப்பித்த தீர்ப்பில், ‘‘பதவி உயர்வுக்கான முதுநிலைப் பட்டியல் என்பது அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில்தான் இருக்கவேண்டுமே தவிர, சாதி மற்றும் இனசுழற்சி உள்ஒதுக்கீடு அடிப்படையில் இருக்கக்கூடாது’’ எனத் தீர்ப்பளித்தனர்.

இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவையும் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்று கூறி, பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.

“அரசு பணியில் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்கவேண்டும்” : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

இந்நிலையில் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே அரசுப் பணியில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற உத்தரவை மறு சீராய்வு செய்யக்கோரி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு ஏற்கனவே இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மதிப்பெண் அடிப்படையில் அரசு பணியில் பதவி உயர்வு வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டி தமிழக அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

banner

Related Stories

Related Stories