தமிழ்நாடு

“மிசாவையே பார்த்தவன் நான்; ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்” : மோடி அரசுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!

“அ.தி.மு.க.,வை போல நாங்கள் காலில் விழமாட்டோம். அதை எங்களிடம் ஒருபோதும் எதிர்பார்க்காதீர்கள்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“மிசாவையே பார்த்தவன் நான்; ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்” : மோடி அரசுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!
stalin 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கிவிட்டதால், வேட்பாளர்களின் பிரச்சார பரப்புரைகள் சூடுபிடித்துள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என பல கருத்து கணிப்புகள் கூறி வருகின்றன.

அ.தி.மு.க வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் செல்லுமிடமெல்லாம் மக்கள் ஊழல் அ.தி.மு.கவையும், மதவெறி பா.ஜ.கவையும் வீழ்த்துவது உறுதி என்பது கண்கூடாக தெரிகிறது. தி.மு.கவின் வெற்றியை உறுதி செய்யும் விதமாகவே உள்ளது.

இந்த நிலையில், நாட்டில் தேர்தல் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் தி.மு.க வேட்பாளர் மற்றும் முக்கிய பொறுப்பாளர் வீடுகளிலும், அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனையிடு வருகின்றனர்.

“மிசாவையே பார்த்தவன் நான்; ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்” : மோடி அரசுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!

அதன் தொடர்ச்சியாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமான வரி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் விதி முறைகளுக்கு மாறாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளது. தி.மு.க.வுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது என்பது மிக அப்பட்டமாகத் தெரிகிறது என தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வருமான வரித்துறையினரின் இந்த சோதனைக்கு தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “நான் இன்று காலையில் சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு திருச்சிக்கு வந்து இறங்கினேன். திருச்சியிலிருந்து காரில் புறப்பட்டு இந்த ஜெயங்கொண்டத்தில் நடக்கும் கூட்டத்திற்கு காரில் வந்து கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஒரு செய்தி கிடைத்தது. அது என்ன செய்தி என்றால், என்னுடைய மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 30 பேர் உள்ளே புகுந்து, காவல்துறை அதிகாரிகள் 100 பேர் பாதுகாப்போடு சோதனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

“மிசாவையே பார்த்தவன் நான்; ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்” : மோடி அரசுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!

அதாவது அ.தி.மு.க அரசை இன்றைக்குக் காப்பாற்றிக் கொண்டு இருப்பது பா.ஜ.க அரசு - மோடி அரசு. ஏற்கனவே சோதனைகள் பல நடத்தி அந்தக் கட்சியை மிரட்டி உருட்டி வைத்திருக்கிறார்கள். அதன் மூலமாகத் தமிழ்நாட்டில் உரிமைகள் எல்லாம் பறித்திருக்கிறார்கள். ஐ.டி., சி.பி.ஐ வைத்து எல்லாரையும் மிரட்டுகிறார்கள்.

நாம் ஒன்றை மட்டும் மோடி அவர்களுக்கு சொல்கிறேன். இது தி.மு.க. மறந்து விடாதீர்கள். நான் கலைஞருடைய மகன். இந்த சலசலப்புக்கு எல்லாம் நான் அஞ்சி ஒடுங்கிவிட மாட்டேன். மிசாவையே பார்த்தவன்தான், எமர்ஜென்சி காலத்தையே பார்த்தவன் இந்த ஸ்டாலின். நீங்கள் எத்தனை சோதனை நடத்தினாலும் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டோம்.

அதாவது தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் தான் இருக்கிறது. எனவே இவர்களை எப்படியாவது மிரட்டி அச்சுறுத்தி அவர்களை வீட்டில் படுக்க வைத்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அது தி.மு.க.காரனிடம் நடக்காது. அது அ.தி.மு.க.வினரிடம்தான் நடக்கும். அவர்கள் மாநில உரிமைகளை இன்றைக்கு விட்டுவிட்டு உங்கள் காலில் விழுந்து இருக்கலாம். ஆனால் நாங்கள் பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கு அஞ்சிட மாட்டோம். எந்த சலசலப்பிற்கும் அஞ்சிட மாட்டோம். இதற்கெல்லாம் மக்கள் பதில் தரும் நாள் தான் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி என்பதை மறந்து விடக்கூடாது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories