தமிழ்நாடு

“MLA ஆன பிறகு இந்த பக்கமே வரவில்லை” : அ.தி.மு.க வேட்பாளரை ஊருக்குள் விடாமல் துரத்தி அடித்த கிராம மக்கள் !

செய்யாறு அருகே அ.தி.மு.க வேட்பாளரை கிராமத்திற்கு உள்ளே வாக்கு சேகரிக்க அனுமதிக்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“MLA ஆன பிறகு இந்த பக்கமே வரவில்லை” : அ.தி.மு.க வேட்பாளரை ஊருக்குள் விடாமல் துரத்தி அடித்த கிராம மக்கள் !
DIGI TEAM 1
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

செய்யாறு அருகே அதிமுக வேட்பாளர் தூசி மோகன் வாக்கு சேகரிக்க வந்த போது தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என குற்றம்சாட்டி கிராமத்திற்கு உள்ளே வாக்கு சேகரிக்க அனுமதிக்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் ஒன்றியத்தில் சுமங்கலி, திருப்பனங்காடு, திருபணமூர், காகனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை அ.தி.மு.க வேட்பாளர் தூசி மோகன் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

அதனையடுத்து மாலையில் சுமங்கலி கிராமத்தில் வாக்கு சேகரித்து விட்டு சுமங்கலி காலனி பகுதிக்குள் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் வாக்கு சேகரிக்க சென்ற போது, அப்பகுதி இளைஞர்கள் சுமார் இருபதுக்கும் மேற்பட்டோர் தங்கள் கிராமத்தின் முகப்பில் நின்றுகொண்டு அ.தி.மு.க வேட்பாளர் தூசி மோகன் எங்கள் கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க உள்ளே வரக்கூடாது என தடுத்து நிறுத்தினர்.

அவர்களை போலிஸார் சமாதானப்படுத்திய போது கடந்த தேர்தலில் வாக்கு கேட்டு வந்த இந்த எம்.எல்.ஏ ஜெயித்து எம்எல்ஏ ஆன பிறகு எங்கள் கிராமத்தின் பக்கமே எட்டிப்பார்க்கவில்லை, கிராமத்திற்கு எவ்வித அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. எனவே, எங்கள் கிராமத்திற்கு உள்ளே வரக்கூடாது, நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இளைஞர்களிடம் போலிஸார் எவ்வளவோ சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும், தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததால் வேறுவழியின்றி சுமங்கலி காலனிப்பகுதிக்குள் செல்லாமல் அடுத்த கிராமத்திற்கு வாக்குகள் சேகரிக்க சென்றுவிட்டார் அ.தி.மு.க எம்.எல்.ஏ தூசி.மோகன்.

செய்யாறு தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ தூசி.கே.மோகனுக்கு மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்து அ.தி.மு.க தலைமை அறிவித்த அன்றிலிருந்தே செய்யாறு தொகுதி அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் சில நிர்வாகிகளும் வேட்பாளரை மாற்றக்கோரி பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மூன்று தினங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்று வாக்கு கேட்டு வந்த அ.தி.மு.க வேட்பாளர் தூசி.கே.மோகனை கிராமத்திற்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories