தமிழ்நாடு

பொள்ளாச்சி துயரத்தின் இரண்டாமாண்டு : மீண்டும் போட்டியிடும் ஜெயராமனுக்கு முடிவுகட்ட காத்திருக்கும் மக்கள்!

பொள்ளாச்சி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் ஜெயராமனை தோற்கடிக்க தொகுதிமக்கள் முடிவு செய்துள்ளனர்.

பொள்ளாச்சி துயரத்தின் இரண்டாமாண்டு : மீண்டும் போட்டியிடும் ஜெயராமனுக்கு முடிவுகட்ட காத்திருக்கும் மக்கள்!
Nakkheeran
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் மீண்டும் போட்டியிடும் பொள்ளாச்சி ஜெயராமன் புதனன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எங்கள் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புகின்றனர். அவர்களுக்கு நான் எச்சரிக்கை செய்கிறேன். இதுபற்றி யாராவது இனி பேசினால் நானும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவேன் என மிரட்டினார். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கத்தான் செய்யும்.

"'அண்ணா பெல்ட்டால அடிக்காதீங்கண்ணா...' என்று கதறிய குரல் இன்னமும் பொள்ளாச்சி மக்களின் இதயங்களைக் கிழித்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளாகிவிட்டாலும் இன்னும் யாரும் அதை மறக்கவில்லை. இது மறக்கக்கூடிய சம்பவமும் அல்ல.

பொள்ளாச்சி துயரத்தின் இரண்டாமாண்டு : மீண்டும் போட்டியிடும் ஜெயராமனுக்கு முடிவுகட்ட காத்திருக்கும் மக்கள்!

1100-க்கும் மேற்பட்ட வீடியோக்களை எடுத்து வைத்து பணம் பறித்து, கற்பை சூறையாடுகின்ற கூட்டம் இந்த அ.தி.மு.கவின் ஆதரவுடன் செயல்பட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. பெண்களைச் சிதைத்த இந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏவின் மகன் உட்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் உண்டு என பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகின்றனர். ஆனால் இதையெல்லாம் காதில் வாங்கிக்கொண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை காவல்துறை.

அ.தி.மு.க அரசின் ஆதரவுடன் பாலியல் வன்கொடுமையை அரங்கேற்றிய குற்றவாளிகளைக் காப்பாற்ற அமைச்சர்கள் முதல் காவல்துறையினர் வரை முயற்சித்தனர். எதிர்ப்புக்குரல் அதிகரிக்கவே ஒப்புக்காக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அ.தி.மு.கவை சேர்ந்தவர்கள். மேலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த கொடூர சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இந்த வழக்கை விரைவுபடுத்தாமல் அ.தி.மு.க அரசு முட்டுக்கட்டை போட்டு குற்றவாளிகளைப் பாதுகாத்து வருகிறது.

பெண்களைச் சீரழித்த கும்பலுக்குத் தலைமை தாங்கிய பொள்ளாச்சி ஜெயராமனை, இந்தத் தேர்தலில் படுதோல்வியடையச் செய்ய மக்கள் உறுதிபூண்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories