தமிழ்நாடு

பைக்கில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்... திருட்டுக் கணக்கை தொடங்கியதா அ.தி.மு.க-பா.ஜ.க?

திருச்சியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பைக்கில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்... திருட்டுக் கணக்கை தொடங்கியதா அ.தி.மு.க-பா.ஜ.க?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் மும்பரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆளும் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதைப் பார்க்க முடிகிறது.

அதுமட்டுமல்லாது கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஆளும் அ.தி.மு.க - பா.ஜ.க முறைகேடுகளில் ஈடுபட்டது. இந்நிலையில் தற்போது வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் அதிக கால இடைவெளி இருப்பதன் மூலம் மீண்டும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி செய்ய அ.தி.மு.க - பா.ஜ.க முயற்சி செய்யும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், திருச்சியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்தவித பாதுகாப்புமும் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் கொண்டுசென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த வித போலிஸ் பாதுகாப்பும் ஒன்றி, இருவர் இருசக்க வாகனத்தில் சுமார் 10 கி.மீ தூரம் கொண்டு சென்றுள்ளனர்.

பைக்கில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்... திருட்டுக் கணக்கை தொடங்கியதா அ.தி.மு.க-பா.ஜ.க?

இதனிடையே செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் ஒருவர் இதுதொடர்பாக கேள்வி எழுப்ப போது, தாங்கள் தேர்தல் நடத்தும் அலுவலத்தில் பணிபுரிவதாக தெரிவித்துள்ளனர். எங்கிருந்து கொண்டு வந்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து வேகமாக கிளம்பியுள்ளனர்.

இந்தச் சம்பவம் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories