கரூரில் அங்கன்வாடி பணியாளர் சந்தியா என்பவர் உயர் அதிகாரிகள் மிரட்டியதால் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார் சாப்பிடுவதற்கு முன் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்த்து வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம் கொளத்து பாளையம் தொழில்பேட்டை ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா. அங்கன்வாடி பணியாளர் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்துவந்த சந்தியாவை அவரது உயர் அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மன உலைச்சளுக்கு ஆளான சந்தியா நேற்று காலை தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவர் வீடியோ பதிவையும் வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், உடல்நிலை சரியில்லாத போது பணிக்கு வரச்சொல்லி தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், பணி மாறுதல், சம்பளக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுவதாகவும் உயர் அதிகாரிகள் மிரட்டுவதாக குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் தன்னை அவமானப்படுத்தியதால் தான் தற்கொலைக்கு செய்துகொள்கிறேன்; அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள்” எனத் பேசினார். இதனிடையே, சந்தியா எழுதிய கடிதமும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த கடித்ததில், “அனைவருக்கும் வணக்கம்அனைத்து அங்கன்வாடி ஊழியர்களுக்கும் வணக்கம்.
என்னை cdpo மேடம் அவர்கள் அலுவலக பணிக்கு வரச் சென்னார்கள். எனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஒருவாரம் அதனால் வரவில்லை என்று கூறினேன். அதற்கு அவர்கள் மிகவும் மோசமாகவும், அவதூராகவும் பேசி என்னை மன உலைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள்.
மேலும் சக ஊதியர்கள் மத்தியில் மிகவும் அவமானம் படுத்தும் வகையில் நடத்துகிறார்கள். எனக்கு மிகவும் மன உலைச்சலாக உள்ளது. எனது பிள்ளைகளை பற்றியும் கேலி பேசுகிறார்கள். என்னால் தாங்க முடியவில்லை என் சாவுக்கு copo madam மட்டுமே காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.
உயர் அதிகாரிகளின் மிரட்டலால் அங்கன்வாடி பெண் பணியாளர் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.