மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமைந்த நாள் முதல் சாமானிய மக்களுக்கு எதிரான திட்டங்களையே செயல்படுத்தி வருகிறது என தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
அதில் முக்கியமாக பங்காற்றுவது பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என பாஜக அரசு அறிவித்ததை அடுத்து தினந்தோறு எரிபொருட்களின் விலை உச்சத்தை எட்டி வருகிறது. அதுபோக, பெட்ரோல் டீசலுக்கு மத்திய அரசு விதித்துள்ள கலால் வரியால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
அவ்வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 89.91 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது நேற்றைய விலையை விட 26 காசுகள் அதிகரித்துள்ளது. அதேபோல, டீசலின் விலை 24 காசுகள் அதிகரித்து 82.85 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஏற்கெனவே கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஏழை எளிய மக்களின் அன்றாட செலவையும் நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே செல்வது அவர்களை வாட்டி வதைத்து வருகிறது.