‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ எனும் தலைப்பில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுவரும் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தேனி தெற்கு மாவட்டம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதன்படி கன்னியப் பிள்ளைபட்டி பகுதி வழியாக பிரச்சாரத்திற்குச் சென்ற தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினைப் பார்ப்பதற்கு சிறுவர்கள் சிலர் வெயில் காத்திருந்தனர்.
இதனைப்பார்த்த உதயநிதி ஸ்டாலின் வாகனைத்தை நிறுத்தச்சொல்லி அவர்களை அழைத்துப் பேசினார். அப்போது தி.மு.க இளைஞரணிச் செயலாளர் அழைத்த சந்தோசத்தில் அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் காரை சூழ்ந்துக்கொண்டனர்.
அவர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் அதில் இருந்த சிறுவன் துண்டுப்பேப்பரில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றை கொடுத்தான். அந்த கடிதத்தில், “அன்புள்ள தி.மு.க கட்சியினர்., எங்களுக்கு கிரிக்கெட் பேட் தேவை. அதனால் நீங்கள் நிங்கள் எங்களுக்கு கிரிக்கெட் பேட் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்” எனக் எழுதியுள்ளனர்.
கடிதத்தைப் பெற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். இதனையடுத்து மதியம் சிறுவர்கள் கடிதம் கொடுத்த நிலையில், இரவுகுள்ளேயே நிர்வாகிகள் மூலம் சிறுவர்களை அழைத்து வந்து அவர்கள் ஆசையாக கேட்ட கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்.
எதிர்கால இளைஞர்களான சிறுவர்-சிறுமியரிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வரும் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இந்த சிறுவர்களுக்கு பரிசாக பேட் வழங்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.