தமிழ்நாடு

சென்னையில் ரூ.90-ஐ எட்டிய பெட்ரோல் விலை.. கொள்ளையடிக்கும் மோடி அரசு.. கதறும் பொது மக்கள்!

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையில் ரூ.90-ஐ எட்டிய பெட்ரோல் விலை.. கொள்ளையடிக்கும் மோடி அரசு.. கதறும் பொது மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும், வைரஸ் பரவலை தடுக்க மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல் அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

சென்னையில் ரூ.90-ஐ எட்டிய பெட்ரோல் விலை.. கொள்ளையடிக்கும் மோடி அரசு.. கதறும் பொது மக்கள்!

இதையடுத்து சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய நிலவரப்படி 89.34ரூபாய் என விற்பனை ஆன நிலையில்31 காசுகள் அதிகரித்து இன்று 89.65 ரூபாய் என விற்பனை ஆகிறது

டீசல் விலை நேற்று 82.28ரூபாய் விற்பனை ஆன நிலையில்,33காசுகள் அதிகரித்து 82.61 ரூபாய் என விற்பனை ஆகிறது. இந்த நடைமுறை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையால் இருசக்கர வாகனங்களை தவிர்த்துவிட்டு சைக்கிளில் செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டு உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories