சென்னை குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குநரை திமுக தென் சென்னை மாவட்ட செயலாளரும் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் உள்ளிட்டோர் குடிசை மாற்று வாரியம் சம்பந்தமாக சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் மா. சுப்பிரமணியன், இன்னும் சில நாட்கள் அதிமுக ஆட்சி முடிவதற்குள், குடிசை மாற்று வாரிய டெண்டர் எடுத்து அதிலிருந்து கமிஷன் பெற வேண்டி அவசர அவசரமாக குடிசை மாற்று வாரிய பகுதிகளை கட்டிடமாக மாற்ற அதிமுக அரசு செயல்பட்டு வருவதாகவும், எந்தவித வசதியும் இன்றி வீடுகள் கட்டித்தருவது மன வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.
வசதிகள் இல்லாமல் பதினான்கு அடுக்குகளில் குடிசை மாற்று வாரியம் கட்டி தருவதை விடுத்து அனைத்து வசதிகளுடன் கட்டி தர அரசு முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் 7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசு நாடகம் ஆடுகிறதா அல்லது ஆளுநர் நாடகமாடுகிறாரா என்பது தெரியவில்லை. ஆளுநருக்கு தமிழக அரசு கொடுக்கும் அழுத்தம் மயிலிறகால் வருடுவது போல் தான் இருக்கிறது.