தமிழ்நாடு

அதிமுகவின் பத்தாண்டு கால தமிழகத்தில் நடந்தது என்ன? 10 வரிகளில் விவரித்த முரசொலி தலையங்கம்!

சொந்தக் கட்சியினரை சந்திக்கக் கூட முடியாத அளவுக்கு முதலமைச்சர் என்ன வேலையில்இருக்கிறார்? - அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் மக்களை எப்படி நடத்துகிறார்கள்என்பதற்கு உதாரணம் இது!

அதிமுகவின் பத்தாண்டு கால தமிழகத்தில் நடந்தது என்ன? 10 வரிகளில் விவரித்த முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் - என்று முழங்கினார் பேரறிஞர் அண்ணா! காஞ்சி தந்த அந்த வள்ளுவனின் பாதையில் புதிய பயணத்தைத் தொடங்கி இருக்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்! ஏழைகளின் துயரத்தை 100 நாளில் தீர்ப்பேன் என்பதுதான் நேற்றைய தினம் தலைவர் எடுத்திருக்கும் சூளுரை!

பத்து ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியை பத்து வரிகளில் வடிவமைத்துச்சொல்வதாக இருந்தால் ரூ.5 லட்சம் கோடிக்கு தமிழ்நாட்டின் கடன் சுமையை ஏற்றி இருக்கிறார்கள் என்பது ஒன்று!

பல்லாயிரம் கோடிக்கு கொள்ளை அடித் திருக்கிறார்கள் என்பது இரண்டு!

தமிழ்நாட்டின் அரசியல், சமூக மரியாதையை தரைமட்டத்துக்கு தாழ்த்தியிருக்கிறார்கள் என்பது மூன்று!

தமிழகத்தின் உரிமைகளை மத்திய பா.ஜ.க. அரசிடம் அடமானம் வைத்துவிட்டார்கள் என்பது நான்கு!

தமிழக நிர்வாகக் கட்டமைப்பையே ஒட்டு மொத்தமாக சிதைத்துவிட்டார்கள் என்பது ஐந்து!

பெரும் முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாக ஆக்கிவிட்டார்கள் என்பது ஆறாவது!

இளைஞர்களின் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கி விட்டார்கள்என்பது ஏழாவது!

சுயநலமிகளின் வேட்டைக்காடாக கோட்டை யை ஆக்கிவிட்டார்கள் என்பது எட்டாவது!

தமிழக நிதிக் கருவூலத்தையே சூறையாடி விட்டார்கள் என்பது ஒன்பதாவது!

தகுதியற்ற மனிதரிடம் முதலமைச்சர் நாற்காலி சிக்கி இருக்கிறது என்பது பத்தாவது!

இதுதான் அ.தி.மு.க. ஆட்சியில் பத்து ஆண்டு காலத் தமிழகம்! கடன் வாங்கி பணத்தை கஜானாவில் சேர்த்து - அந்தப் பணத்தை டெண்டர்விட்டு எடுத்துக் கொள்வதுதான் அ.தி.மு.க. அரசாங்கத்தின் ஒரே சிந்தனை.

அதிமுகவின் பத்தாண்டு கால தமிழகத்தில் நடந்தது என்ன? 10 வரிகளில் விவரித்த முரசொலி தலையங்கம்!

முதலமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்களுக்கும் தெரிந்த ஒரே வழிஇதுதான். அதனால் தான் தமிழ்நாட்டின் அனைத்து தரப்பினரது நம்பிக்கையையும் இழந்த அரசாக இது இருக்கிறது. எந்தத் தொகுதிக்கும் எந்தப் புதிய திட்டங்களும் இல்லை. முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் தொகுதிகள் கூட மக்களின் அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்து தராத அரசாக இது இருக்கிறது. எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட பெரிய சோரகை ஊராட்சியில் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை பழனிசாமி தொடங்கினார்.

இதே ஊராட்சியில் பூமிரெட்டிபட்டி அருந்ததி யர் காலனியை சேர்ந்த மக்கள்தங்கள் பகுதியில் அடிப்படை வசதி செய்து தரவில்லை என்றும் பட்டாவழங்கவில்லை என்றும் கூறி தொடர்ந்து போராடி வருவதை பழனிசாமிகண்டுகொள்ளவே இல்லை.இவர் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய பிறகு கடந்த 30.12.2020 ஆம் தேதிஎடப்பாடியில் இருந்து இந்த மக்கள் சேலம் வந்தார்கள். சேலம் மாநகரில் உள்ள முதல்வரை சந்தித்து மனு அளிக்க வந்தனர். ஆனால் அவர்களை சந்திக்ககாவல்துறையினர் அனுமதி மறுத்து விட்டார்கள். அதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் மீடியாக்களுக்குப் பேட்டி கொடுத்தார்கள்.

எங்களது கோரிக்கையை முதலமைச்சர் காது கொடுத்து கேட்க மாட்டாராஎன்பதுதான் அவர்களது கேள்வி. எந்த இடத்தில் அவர் தேர்தல் பிரச்சாரம் தொடங்கினாரோ, அங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பது தான் ஒரு முதலமைச்சர்தொகுதியின் நிலை! அன்று முதல்வரை சந்திக்க வந்த அருந்ததியர் காலனியைச் சேர்ந்த பலரும்அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்று சொன்னார்கள். சொந்தக் கட்சியினரை சந்திக்கக் கூட முடியாத அளவுக்கு முதலமைச்சர் என்ன வேலையில்இருக்கிறார்? - அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் மக்களை எப்படி நடத்துகிறார்கள்என்பதற்கு உதாரணம் இது!

இத்தகைய மக்கள் தங்கள் ஆதங்கத்தைச் சொல்லும் களமாக தி.மு.க.ஒருங்கிணைத்த கிராம சபைகள் அமைந்திருந்தன. இந்த அரசாங்கம்தங்களுக்கு செய்யத்தவறிய எத்தனையோ கோரிக்கைகளை கண்ணீரோடு அந்த மக்கள் கழக நிர்வாகிகளிடம் சொன்னார்கள். அந்த மக்களுக்கானநம்பிக்கையை நிர்வாகிகள் கொடுத்துவிட்டு வந்துள்ளார்கள். இதை வைத்து தலைவர் மு.க.ஸ்டாலின் தீட்டிய திட்டம் தான், ‘உங்கள்தொகுதியில் ஸ்டாலின்' என்பதாகும். 234 தொகுதிக்கும் நேரடியாகச் சென்றுமக்களிடம் கோரிக்கை மனுக்களை தலைவர் வாங்க இருக்கிறார். அத்தோடு கடமை முடியவில்லை. இந்தக் கோரிக்கை மனுக்களை ஆட்சி அமைந்ததும் 100 நாட்களுக்குள் இவை பரிசீலித்து தீர்வு காணப்படும் என்று அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதி என்பது மகத்தானதாகும்.

"மு.க. ஸ்டாலின் ஆகிய நான், தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் முன்னிலையில் ஒரு உறுதியை அளிக்கிறேன். உங்கள் பிரச்சினை களைத் தீர்ப்பதே எனதுமுதல் பணி. எனது அரசின் முதல் 100 நாட்கள், போர்க்கால அடிப்படை யில்உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு" - என்று தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளஉறுதிமொழி, உறுதிமிக்கது! எல்லாவற்றிலும் சந்தேகம் கொள்பவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கானபதிலையும் தலைவர் தந்துவிட்டார்.

"தமிழகம் முழுவதும் வாங்கிய மக்களின் மனுக்களை நிறைவேற்ற தமிழ்நாடு அரசில் தனித்துறை உருவாக்கப்படும். அந்தத் துறை, மாவட்ட ரீதியாகஇந்த மனுக்களை பிரித்து பரிசீலித்து அதனை உடனடியாக நிறைவேற்றித் தரும் என்ற வாக்குறுதியை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் வழங்குகிறேன். தொகுதி வாரியாக - கிராம வாரியாக முகாம்கள் அமைத்து இப்பிரச்சினைகள் குறித்துநேரடியாக விசாரணை நடத்தி நிறைவேற்றித் தருவோம். அதாவது அ.தி.மு.க. அரசாங்கம் செய்யத் தவறிய கடமையை-தி.மு.க. அரசாங்கம் நிச்சயம் செய்து கொடுக்கும்! இந்தக் கடமையை தி.மு.க. அரசு நிறைவேற்றி முடிக்கும் போதுதமிழகத்தில் சுமார் ஒரு கோடி குடும்பங்களின் கோரிக்கையானது நிறைவேற்றப்பட்டு இருக்கும்" என்றும் சொல்லி இருக்கிறார்! தி.மு.க. அரசு, மக்கள் அரசாக இருக்கும் என்பதற்கான உறுதிமொழி இது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பதற்கான உறுதிமொழி இது!

banner

Related Stories

Related Stories