தமிழ்நாடு

“சீன கடன் செயலிகளுக்கு அனுமதியில்லை” - சென்னை CCBயின் கடிதத்துக்கு ரிசர்வ் வங்கி விளக்கம்!

சீனா கடன் கொடுக்கும் போலி செயலி விவகாரம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் கடிதத்திற்கு ஆர்பிஐ விளக்கத்துள்ளது.

“சீன கடன் செயலிகளுக்கு அனுமதியில்லை” - சென்னை CCBயின் கடிதத்துக்கு ரிசர்வ் வங்கி விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சீன கடன் கொடுக்கும் போலி செயலி விவகாரம் தொடர்பாக இந்த செயலியானது, இந்தியாவில் நிதி நிறுவனங்கள் மற்றும் பண பரிவர்த்தனை செய்வதற்கான அனுமதியை கொடுக்கும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவிடம் அனுமதி பெற்றுள்ளதா ?

இது போன்ற செயலிகள் செயல்பட விதிமுறைகள் உள்ளதா ? என்பது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் மூலம் விவரம் கேட்டு இருந்தனர்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் இந்த கடிதத்திற்கு ஆர்.பி.ஐ விளக்கம் அளித்துள்ளது. அதில் Google Play Store மூலம் அங்கீகாரமற்ற கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்து அதன் மூலமாக லோன் கொடுப்பதற்கு ஆர்.பி.ஐ இன் விதிமுறைகளில் அனுமதி இல்லை ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

இந்தியாவில் செயல்படும் வங்கிகள் மற்றும் அனுமதி பெற்ற நிதி நிறுவனங்களுக்கு மட்டுமே ஆர்பிஐ கடன் கொடுக்கும் உரிமையை வழங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மூலம் கடன் கொடுப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவைகளும் கம்பெனிகள் சட்டப்படி இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு அதற்கான ஆர்பிஐ விதித்துள்ள விதிமுறைகளின் கீழ் மட்டுமே இயங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories