தமிழ்நாடு

வேளச்சேரி-ஆலந்தூர் பறக்கும் ரயில் திட்டம்: 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்ட அதிமுக -T.R.பாலு குற்றச்சாட்டு!

417 கோடி செலவில் வேளச்சேரி-ஆலந்தூர் பறக்கும் ரயில் பணிகளை அதிமுக அரசு கிடப்பில் போட்டுள்ளதால் மும்முனை இணைப்பு ரயில் நிலையம் அமைவதில் மெத்தனம் ஏற்பட்டுள்ளது என டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

417 கோடி செலவில் வேளச்சேரி-ஆலந்தூர் இடையே திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பறக்கும் இரயில் திட்டப்பணிகளை 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் நிறைவேற்றாதை கண்டித்து சென்னை ஆதம்பாகம் அம்பேத்கர் திடலில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலஷ்மி மதுசூதனன், இதயவர்மன், கழக தீர்மான குழு உறுப்பினர் மி.ஆ.வைத்தியலிங்கம், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், மகளிர் அணியை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையில் பங்கேற்று அதிமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது பேசிய திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு :- 10 ஆண்டுகளுக்கு முன் தமிழக முதல்வராக கலைஞர் இருந்தார். மத்திய ஆட்சியாளர்களிடன் பேசிய நிலையில் சென்னை நகர போக்குவரத்து நெரிசலை குறைக்க வேளச்சேரி- ஆலந்தூர் இடையே பறக்கும் இரயில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதுபோல் திட்டத்திற்கு தலைவர் கலைஞர் தலைமையிலான மாநில அரசு செலவை ஏற்கும் விதமாக அதிக நில எடுப்பு செலவை ஏற்று திட்டம் விரைந்து முடிக்க வழிவகை செய்தது. ஆனால் 417 கோடி செலவில் துவங்கிய வேளச்சேரி- ஆலந்தூர் பறக்கும் ரயில் பணிகள் கடைசியாக 500 மீட்டர் பணிகள் நிறைவடையாமல் உள்ளது. இதற்கு நில எடுப்பு சம்மந்தமான வழக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முடிந்து.

அதிமுக கிடப்பில் போட்டதால்தான் இந்த புறநகர் ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், பறக்கும் ரயில் நிலையம் என ஆலந்தூரில் மும்முனை ரயில்களும் இணையும் பகுதி நிறைவடையாமல் உள்ளது என குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

banner

Related Stories

Related Stories