தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழையும் நாளை லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும் .
மீனவர்களை எச்சரிக்கை ஏதும் இல்லை. தற்போது வரை தமிழகத்தின் மழைப்பதிவு 43.2 செ.மீ இருப்பதாகவும் 44.7 செ.மீ மழைப்பதிவு டிசம்பர் வரை எதிர்பார்க்க வாய்ப்புள்ளது என்று புவியரசன் கூறியுள்ளார்.