தமிழ்நாடு

“கொரோனா சிகிச்சை அளிக்க நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” : மு.க.ஸ்டாலின் !

“கொரோனா சிகிச்சை அளிக்க நியமிக்கப்பட்ட 4,000 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

“கொரோனா சிகிச்சை அளிக்க நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” : மு.க.ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா பாதிப்புகள் முழுமையாக விலகாத நிலையில், கோவிட்-19 காலத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று (13-12-2020) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியில், “கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றிய அரசு செவிலியர்கள் 4000 பேருக்குத் தற்காலிக பணிக்காலம் நிறைவடைய உள்ளது.

கொரோனா நோய்த் தொற்று அபாயம் முழுமையாக நீங்காத நிலையில், செவிலியர்களின் சேவை மருத்துவத்துறைக்கும் மக்களுக்கும் தேவை என்பதால் அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories