தமிழ்நாடு

“சென்னை தீவுத்திடல் அருகே வீடுகளை இடித்து எடப்பாடி அரசு அராஜகம்” : நடுத்தெருவுக்கு வந்த பூர்வகுடிகள்!

சென்னை தீவுத்திடல் கூவம் கரையோரம் உள்ள பகுதியை அகற்றிய பொதுபணிதுறை மற்றும் சென்னை மாநகராட்சி கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை எழிலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“சென்னை தீவுத்திடல் அருகே வீடுகளை இடித்து எடப்பாடி அரசு அராஜகம்” : நடுத்தெருவுக்கு வந்த பூர்வகுடிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை தீவுத்திடல் அருகே உள்ள காந்தி நகரில் கூவம் ஆற்றங்கரை ஓரம் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதி மக்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வசிப்பதாகச் சொல்லி, அவர்களை காலி செய்யவைக்க பொதுப்பணித்துறை தொடர்ந்து முயற்சித்து வருகின்றது.

முன்னதாக, சென்னை அண்ணா சாலை பகுதியில் அன்னை சத்தியவாணி முத்து நகரில் எந்த அறிவிப்புமின்றி 2000க்கும் மேற்பட்ட குடிசைகளை ஆளும் அ.தி.மு.க அரசு இடித்துத் தள்ளியது. அந்த மக்களுக்கே நகரின் மைப்பகுதியில் இன்னும் இடம் தராமல் இழுத்தடிக்கப்படும் நிலையில், தீவுத்திடல் கூவம் கரையோரப் பகுதியான காந்தி நகர் குடிசைப்பகுதியை பொதுப்பணித்துறையினர் அகற்றிவருகின்றனர்.

அதன்படி, நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள வீடுகளை பொதுப்பணித்துறையினர் இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அருகிலுள்ள கூவம் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“சென்னை தீவுத்திடல் அருகே வீடுகளை இடித்து எடப்பாடி அரசு அராஜகம்” : நடுத்தெருவுக்கு வந்த பூர்வகுடிகள்!

இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி இன்று இரண்டாவது நாளாக, முன்அறிவிப்பின்றி குடிசைப் பகுதியை அகற்றிய பொதுப்பணித்துறை மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை எழிலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வா பேசுகையில், “பொதுப்பணித்துறையும் சென்னை மாநகராட்சியும் தீவுத்திடல் காந்தி நகர் குடிசைப்பகுதியை அகற்றும் பணியில் ஈடுபட்டடு வருகின்றனர்.

முன்னதாக பொதுப்பணித்துறையை நிர்வகிக்கும் அமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் அந்தப் பகுதி மக்களுக்கு உரிய இடத்தில் குடியிருப்பு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாத வகையில் நேற்று முன்தினம் அந்த குடிசைப்பகுதி அகற்றப்பட்டது. வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் 300 குடும்பங்களைச் சார்ந்த மக்களுக்கு சென்னையிலேயே குடியிருப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

“சென்னை தீவுத்திடல் அருகே வீடுகளை இடித்து எடப்பாடி அரசு அராஜகம்” : நடுத்தெருவுக்கு வந்த பூர்வகுடிகள்!

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், “நேற்று திடீரென வந்து அதிரடியாக வீடுகளை இடித்து எங்கள் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கியுள்ளனர். நேற்று முன் னம் அதிகாரிகள் எங்களிடம் வீடுகளை இடிக்கப் போவதாக சொன்னபோதே, எங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளின் கல்வி பாதிக்கும். எனவே, இடிக்காதீர்கள் என கொஞ்சினோம்.

ஆனால், அவர்கள் அதனைக் கண்டுகொள்ளவில்லை. போராடிய எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களையும் கைது செய்துள்ளார்கள். ஊருக்குள் இருந்த எங்களை ஏற்கனவே ஒதுக்கி வைத்துள்ளார்கள். இப்போது இன்னும் தூக்கி வெளியே எறியப் பார்க்கிறார்கள்.

ஏரிகளை ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டிடம் கட்டியவர்களையும், குளங்களை மூடி குடியிருப்பு கட்டியவர்களையும் விட்டுவிட்டு, ஒதுக்குப்புறமாக இன்னல்களுக்கு மத்தியில் வாழும் எங்களைத்தான் குறிவைத்து அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள். எங்களுக்கு நகரிலேயே வீடுகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.

பொதுப்பணித்துறை மற்றும் போலிஸாரின் இந்த அராஜகப் போக்கைக் கண்டித்து பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories