நிவர் புயல் மற்றும் தொடர் மழையால் பாதிப்பிற்குள்ளான பல்வேறு பகுதிகளிலும் தி.மு.க சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்களாக 11 சட்டமன்றத் தொகுதிகளில், உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி, மக்களைச் சந்தித்து ஆய்வு செய்து வருகிறார்.
தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் சென்னையில் விடாது பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
தேனாம்பேட்டை பீர்காரன் தெருவில் வசிக்கும் பகுதி மக்களுக்கு மதிய உணவு, போர்வை, பால், பிரெட் ஆகியவற்றை வழங்கினார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். இதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்குகிறார்.
தேனாம்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை , ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம் சூளைமேடு என ஒவ்வொரு பகுதியிலும், தொடர் மழை புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு, அரிசி, பிரட் பாக்கெட், பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்வின் போது மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.