சென்னையில் வீடுகள் இன்றி பலர் சாலைகளிலும் மேம்பாலத்திற்கு கீழேயும் வசித்து வருகின்றனர். சாதாரண நாட்களில் கூட மூன்று வேளையும் உண்ண உணவில்லாமல் தவித்து வந்தனர்.
இந்த நிலையில், நிவர் புயலின் காரணத்தால் கொட்டும் மழையில் சென்னையில் உள்ள முக்கிய மேம்பாலத்தின் கீழ் படுத்து உறங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி சென்னையில் கனமழை பெய்து வருவதன் காரணத்தால் அவர்கள் உறங்கும் பகுதியிலேயே மழைநீர் தேங்கியுள்ளது.
இருந்தும், தேங்கியுள்ள மழைநீரில் அருகிலேயே படுத்து உறங்கி வருகின்றன. இதுபோன்ற காலங்களில் உணவகங்களிலும் பெரும்பான்மையாக திறக்கப்படாத காரணத்தினால் பலர் பசியுடன் சுற்றித் திரிவதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.
அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்களை மையப்படுத்தியே இருப்பதன் காரணத்தினால் சாலையோரம் வசிக்கக் வசிக்கக்கூடிய மக்களுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாகச் சென்றடையவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவித்ததை விட, நிவர் புயலின் தாக்கத்தால் மேலும் உணவின்றி தவிப்பதாகவும் உறங்க இடமின்றி சிரமப்படுவதாக கருத்து தெரிவிக்கின்றனர்.