தமிழகத்தில் அழிவின் விளிம்பில் உள்ள 3,083 நீர்நிலைகளை மீட்டெடுக்க தமிழக அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அனைத்து மாநிலங்களிலும் நீர்நிலைகளை பாதுகாப்பதற்கு தலைமைச் செயலாளர்கள் மேற்பார்வயில் உரிய அதிகாரிகளை நியமித்து கண்காணிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று 2015 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் தேசிய பசுமைப் தீர்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதில், அனைத்து மாநிலங்களும் நீர்நிலைகள் குறித்து ஜனவரி 31ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி அவற்றைப் பாதுகாக்க உரிய தீர்வு முறைகளை வகுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 15 ஆயிரத்து 658 நீர்நிலைகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், 3,083 நீர்நிலைகள் அழிவின் விளிப்பில் இருப்பதாகவும், அவற்றை மீட்டெடுக்க வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.