தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு மற்றும் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சைக்கான இயந்திரத்தை துவங்கி வைக்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இது தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆளை விரிவாக்கத்திற்கு தி.மு.க ஆட்சியில் தான் அனுமதி அளித்ததாகவும் இதனால்தான் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு காரணம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளரிடம் பேசிய தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன், “ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தூத்துக்குடியில் மக்கள் 100 நாட்களாக போராட்டம் நடத்தி பின்னர் தான், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்க சென்றபோதுதான் துப்பாக்கிச்சூடு கண்மூடித்தனமாக நடைபெற்று 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த 100 நாள் போராட்டத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தபோது, மாவட்ட ஆட்சித்தலைவர் அங்கிருந்து மனுவை பெற்றிருந்தால் இது போன்ற ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. இதை மூடிமறைக்கும் வகையில் தமிழக முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மீது குற்றம்சாட்டி வருவது கண்டனத்துக்குரியது.
உள்துறையை கையில் வைத்துக் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த படுகொலை நடைபெற்றதை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என தெரிவித்ததை மக்கள் யாரும் இன்னும் மறக்கவில்லை. இந்த 13 பேர் படுகொலைக்கு யார் காரணம் என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள்.
தற்போது நடைபெற்றதை குறித்து கேட்டால் அதை மறைக்கும் வகையில், தி.மு.க ஆட்சியில் தான் விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது என தெரிவிக்கிறார். அதுபோல இந்த ஆலை துவங்குவதற்கு அனுமதி கொடுத்தது ஜெயலலிதா என தெரிவிக்க வேண்டிய தானே என கேள்வி எழுப்பிய கீதாஜீவன், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை அ.தி.மு.க ஆட்சியில்தான் கொண்டு வந்ததாக முதல்வர் தெரிவித்திருப்பது கேலிக் கூத்தாகும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் பல்வேறு சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. பாதாளசாக்கடை திட்டம் இருந்தாலும் பக்கிள் ஒடை திட்டமாக இருந்தாலும் குடிநீர் திட்டமாக இருந்தாலும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது. ஆனால் பாதாள சாக்கடை திட்டம் தி.மு.க ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டது. ஆனால், இதுவரை அ.தி.மு.க ஆட்சியில் இந்த திட்டத்தை நிறைவு செய்யாமல், இழுத்தடித்து தான் வருகிறார்கள் என தெரிவித்தார்.
அதுபோல் தூத்துக்குடியில் நடைபெற்ற வரக்கூடிய ஸ்மார்ட்சிட்டி திட்டம் மூலமாக பணம் விரயம் செய்து வருகிறது. வீணாக செலவு செய்து வருகிறார்கள். இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் தான் ஒரு விவசாயி என தெரிவித்து வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் மசோதாக்களை ஏன் ஆதரித்தார்.
மேலும் நான் ஒரு விவசாயி என தெரிவிக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்தும் தற்போது, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். தான் ஒரு விவசாயி என தெரிவிக்கும் தமிழக முதல்வர் விவசாயக் கடனை தள்ளுபடி செய்து இருக்கலாமே என கேள்வி எழுப்பினார்.